காதலில் சிக்கி விட்டாரா ஜான்வி? உன்னுடன் இல்லாதது சோகமான நாள்... அவுட்டோர் பதிவால் அப்செட்டான பிரபலம்!
நடிகை ஜான்வி கபூர் தற்போது நடித்து வரும் திரைப்படத்திற்காக அவுட்டோர் செல்ல உள்ளதாக கூறி, தன்னை வாழ்த்துமாறு கூறிய பதிவிற்கு, உன்னுடன் இல்லாதது சோகமான நாள் என ஜான்வியின் காதல் சர்ச்சையில் சிக்கிய பிரபலம் அப்செட்டில் கூறியுள்ளது, ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
பாலிவுட் திரையுலகில் படு பிஸியான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜான்வி கபூர். சமீபத்தில் இவர் நடித்த 'குட்லக் ஜெர்ரி' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து தான் நடித்து வரும் திரைப்படங்களுக்காக தயாராகி வருகிறார்.
அந்த வகையில் ஜான்வி கபூர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அனைவருக்கும் ஹாப்பி Monday... தன்னுடைய 'Mrand MrsMahi' என்கிற திரைப்படத்திற்காக அவுட்டோர் செல்ல உள்ளதாகவும் அதற்காக தன்னை அனைவரும் வாழ்த்த வேண்டும் என சில புகைப்படங்களை வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
மேலும் செய்திகள்: நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!
இந்த படத்தில் நடிகர் ராஜ்குமார் ராவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்தில் துளியும் கார்ச்சியும், மேக்கப்பும் இன்றி, வெள்ளை நிற உடையில்... தன்னுடைய பால் வண்ண அழகை வெளிப்படுத்தி ரசிகர்களை பிரமிக்க வைத்தார். இவரது இந்த புகைப்படங்களுக்கு ஒரு பக்கம் லைக்குகள் குவிந்த நிலையில், ஜான்வியின் இந்த பதிவு ஒருவரை மட்டும் அதிக அப்செட் செய்துள்ளது.
கடந்த சில தினங்களாகவே ஜான்வியின் காதல் சர்ச்சையில் கிசுகிசுக்கப்படும் பிரபலமான ஓர்ஹான் அவத்ரமாம்னி. ஜான்வியின் அவுட்டோர் பதிவை பார்த்து மிகவும் அப்செட் ஆனது போல் "நான் உங்களுடன் இல்லாததால் எனக்கு இது ஒரு சோகமான திங்கள் கிழமை என ரிப்ளே செய்துள்ளார்."
மேலும் செய்திகள்: டீப் நெக் கவர்ச்சியில் முன்னழகை மிடுக்காக காட்டி அட்ராசிட்டி செய்யும் ராஷ்மிகா! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போஸ்!
ஏற்கனவே ஜான்வியும் - ஓர்ஹான் அவத்ரமணியும் காதலிப்பதாக கூறப்பட்டு வந்தாலும், இருவருமே இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்தது இல்லை. மேலும் இந்த பதிவால், உண்மையில் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.