நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு!
தாதா சாகேப் பால்கே விருது இந்த முறை, பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் நடிகை ஆஷா பாரிக்கிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதற்க்கு பலர் தொடர்ந்து தங்களின் வாழ்த்துக்களை தெறித்து வருகிறார்கள்.
தென்னிந்திய திரைப்பட துறையில் துறையில் சிறந்து விளங்குவோருக்கு... மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, கடந்த 1969ம் ஆண்டு முதல் முதல் வழங்கப்பட்டு வருகிறது. அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் (1996), கே.பாலச்சந்தர் (2010), ரஜினிகாந்த் ஆகியோர் இந்த விருதினை பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகள்: டீப் நெக் கவர்ச்சியில் முன்னழகை மிடுக்காக காட்டி அட்ராசிட்டி செய்யும் ராஷ்மிகா! இளசுகளை ஏங்க வைத்த ஹாட் போஸ்!
இந்நிலையில், 52வது தாதா சாகேப் பால்கே' விருதினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார். அதன்படி, இந்திய திரைத்துறையில், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை, என தன்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இவருக்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: மெல்லிய இடையை காட்டி மெர்சலாக்கும் மாளவிகா மோகனன்..! ஜிகு ஜிகு உடையில் ஜிவ்வுனு ஈர்க்கும் போட்டோஸ்..!
79 வயதான இவர், "தில் தேகே தேகோ", "கடி படங்", "தீஸ்ரி மன்சில்" மற்றும் "கேரவன்" போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர், இந்தி சினிமாவில் எல்லா காலத்திலும் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருக்கும் பரேக் 1990 களின் பிற்பகுதியில் பாராட்டப்பட்ட தொலைக்காட்சி நாடகமான "கோரா ககாஸ்" தொடரை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.