மர்மநபர்களால் தாக்கப்பட்ட நடிகர் விஷாலின் வீடு..! போலீசில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷாலின் வீட்டில் நேற்று மர்மநபர்கள் சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
 

Actor Vishal house attacked by miscreants give police compliant

நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர், நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமடைந்தது. இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சார்பில் சென்னை கே4 அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது . இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ளதாவது... 

Actor Vishal house attacked by miscreants give police compliant

மேலும் செய்திகள்: நடிகை கர்ப்பமான பின்னர் வைரலாகும் இந்து-முஸ்லீம் முறைப்படி நடந்த விஜய் டிவி சீரியல் நடிகரின் திருமண போட்டோஸ்!
 

வணக்கத்திற்கு உரிய ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், 

சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர், நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமடைந்தது. இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே இந்த புகாரை விசாரணைக்கு ஏற்று கொண்டு, அந்த மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடித்து தண்டனை கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

Actor Vishal house attacked by miscreants give police compliant

நடிகர் விஷால் தற்போது லத்தி, துப்பறிவாளன் 2, மற்றும் மார்க் ஆன்டனி ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக உள்ள விஷாலின் வீடு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: காதலில் சிக்கி விட்டாரா ஜான்வி? உன்னுடன் இல்லாதது சோகமான நாள்... அவுட்டோர் பதிவால் அப்செட்டான பிரபலம்!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios