தேவதை வம்சம் நீயோ... தங்க நிற தாவணியில் பேரழகியாய் மின்னிய அதிதி ஷங்கர்! கவர்ந்திழுக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
'விருமன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ள அதிதி ஷங்கர், தங்க நிற உடையில் மின்னும் பேரழகியாய் வெளியிட்டுள்ள, புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக அவதாரம் எடுத்துள்ள, பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி, தான் தற்போது தமிழ் சினிமாவின் சென்சேஷனல் நாயகியாக உள்ளார்.
எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்ததும், மருத்துவர் தொழிலை கையில் எடுக்காமல்... நடிகையாக வேண்டும் என்பதே தன்னுடைய கனவு என்று கூறி, சினிமா பட வாய்ப்பை தேட துவங்கியுள்ளார்.
மேலும் செய்திகள்: மஹாலட்சுமி - ரவீந்தர் வீட்டில் களைகட்டிய விசேஷம்..! மாலையும் கழுத்துமாக போஸ் கொடுத்த புதுமண தம்பதி..!
இவரது அதிர்ஷ்டம், முதல் படமே... நடிகர் சூர்யா தயாரிப்பில், கொம்பன் பட இயக்குனர்... முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'விருமன்' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படத்தில், தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்த அதிதி... முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பாலும், நடன திறமையாலும், ரசிகர்களை கவர்ந்தார்.
மேலும் செய்திகள்: ரஜினிகாந்த் நடிக்க விரும்பிய... பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது! நடிகர் சரத்குமார் பேச
மேலும் முதல் படத்திலேயே தன்னை ஒரு பாடகியாகவும் அடையாளப்படுத்தி கொண்ட அதிதி, 'விருமன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடிய பாடல், வேறு லெவலுக்கு ஹிட் அடித்தது.
இந்த படத்தை தொடர்ந்து, தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்... 'மாவீரன்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மேலும் செய்திகள்: 71 வயது நடிகருக்கு ஜோடியாகிறாரா ஜோதிகா..? ஜோதிகாவின் அடுத்த படம் குறித்து வெளியான தகவல்..!
மேலும் பல இயக்குனர்கள் இவரை தங்களுடைய படங்களில் கமிட் செய்ய ஆர்வம் காட்டி வருவதாகவும், விரைவில் தமிழை தொடர்ந்து, தெலுங்கு மொழியிலும் இவர் நடிக்க நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிப்பில் ஒரு புறம் ஆர்வம் காட்டி வந்தாலும், மற்றொரு புறம் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதிதி.
மேலும் செய்திகள்: 20 கிலோ எடையை குறைத்து எப்படி..? உச்ச கட்ட கவர்ச்சி உடையில் சிக்ஸ் பேக் உடலை காட்டி ரகசியத்தை வெளியிட்ட கிரண்!
அந்த வகையில் சற்று முன்னர், தங்க நிறத்திலான பாவாடை தாவணியில்... தேவலோக மங்கையாக ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிதி வெளியிட அவை வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.