MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • "வேட்டையன் சும்மா பட்டாசா இருக்கு" தனது ஸ்டைலில் Review சொன்ன அனிரூத் ரவிச்சந்திரன்!

"வேட்டையன் சும்மா பட்டாசா இருக்கு" தனது ஸ்டைலில் Review சொன்ன அனிரூத் ரவிச்சந்திரன்!

Vettaiyan Review : பிரபல இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 04 2024, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anirudh with rajini

Anirudh with rajini

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு இளம் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், "ஜெயிலர்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப் பெரிய வெற்றி திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படம் வெளியான பிறகு இமயமலைக்கு பயணம் மேற்கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அதன் பிறகு பல நாடுகளுக்கும் சுற்றுலா மேற்கொண்டார். 

இறுதியாக இந்தியா திரும்பிய அவர், பல அரசியல் தலைவர்களை சந்தித்து உரையாடியது மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. இருப்பினும் அரசியலில் இருந்து நான் முழுமையாக விலகி உள்ளதாகவும், இனி அரசியல் சம்பந்தமாக எந்த ஒரு விஷயமும் தன்னிடம் கேட்கப்பட வேண்டாம் என்ற கோரிக்கையை அவர் அப்போது முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் தனது "வேட்டையன்" திரைப்பட பணிகளை அவர் தொடங்கினார்.

விக்ரம் பட கிளைமாக்ஸ்.. அது தான் கைதி 2வின் கதையா? அண்ணனோடு மல்லுக்கட்டப்போகும் கார்த்தி!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Jailer movie

Jailer movie

திருநெல்வேலி அருகே "வேட்டையன்" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த போது தான் அவருடைய நண்பரும், பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் காலமானார். கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி அவர் காலமான நிலையில், அந்த தகவல் அறிந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், உடனடியாக தன்னுடைய வேட்டையன் திரைப்பட பணிகளை நிறுத்திவிட்டு உடனடியாக சென்னை திரும்பினார். அடுத்த நாள் மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து கண்ணீர் மல்க அவர் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

ஏற்கனவே நடிகர் சூர்யா மற்றும் மணிகண்டனை வைத்து "ஜெய் பீம்" என்கின்ற மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுத்தவர் ஞானவேல். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அவருடைய மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மூன்றாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் உச்ச நடிகரை இயக்கியுள்ள ஞானவேல், கமர்ஷியல் ரீதியாகவும் கன்டென்ட் ரீதியாகவும் வேட்டையன் திரைப்படத்தை எடுத்திருப்பதாக அண்மையில் அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தார். அது மட்டும் அல்லாமல் தமிழ் திரையுலகத்திற்கு முதல் முறையாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை அறிமுகம் செய்த பெருமை ஞானவேலை இந்த படத்தின் மூலம் சேர்ந்திருக்கிறது.

34
vettaiyan

vettaiyan

இந்த இரண்டு பேரும் ஜாம்பவான்கள் நடிக்கும் வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பிரபல மலையாள திரை உலக நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இந்த திரைப்படத்தில் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது.

44
vettaiyan anirudh

vettaiyan anirudh

கடந்த சில வருடங்களாகவே பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் தான், வேட்டையன் திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். ரஜினியின் எதிர்வரும் அவருடைய கூலி திரைப்படத்திற்கும் இசையமைப்பாளராக பணியாற்றி வருவது அனிருத் தான். இந்நிலையில் தான் இசையமைக்கும் படங்களின் விமர்சனங்களை பொதுவாக எமோஜிகளை வெளியிட்டு ரிவியூ சொல்லும் பழக்கம் கொண்டவர் ரவிச்சந்திரன். ஏற்கனவே ஜெயிலர், ஜவான், லியோ, தேவாரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இதே போல அவர் விமர்சனம் கூறியிருக்கிறார். இந்நிலையில் வேட்டையன்  திரைப்படத்திற்கும் தனது ஸ்டைலில் இந்த திரைப்படம் மாஸாக, ரொம்ப சூப்பராக உள்ளது என்று விமர்சனம் கூறி இருக்கிறார் அனிரூத்.

தளபதி 69 பட பூஜை; வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுத்த விஜய்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
அனிருத் ரவிச்சந்தர்
ரஜினிகாந்த்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved