MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதி 69 பட பூஜை; வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுத்த விஜய்!

தளபதி 69 பட பூஜை; வேஷ்டி சட்டையில் மாலையும் கழுத்துமாக பூஜா ஹெக்டேவுடன் போஸ் கொடுத்த விஜய்!

தளபதி விஜய், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள 'தளபதி 69' படத்தின் பூஜை நடந்து முடிந்துள்ள நிலையில், இதன் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  

2 Min read
Author : manimegalai a
Published : Oct 04 2024, 07:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Thalapathy Vijay Movie

Thalapathy Vijay Movie

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோட்' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி இதுவரை சுமார் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், ஓடிடிக்கு இப்படம் பார்சல் ஆன பின்னரும், தமிழகத்தில் உள்ள, சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 'கோட்' படம் 1000 கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்த்த ரசிகர்கள் கனவு நிறைவேறாவிட்டாலும்... தளபதி தன்னுடைய 69 படத்தில் கண்டிப்பாக 1000 கோடி வசூல் சாதனையை புரிவார் என அவரது தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Thalapathy 69 Pooja

Thalapathy 69 Pooja

'கோட்' படத்தின் ரிலீசுக்கு பின்னர், தளபதி தன்னுடைய கட்சி பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தார். இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்கு தடபுடலாக தயாராகி உள்ளார். இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள 69 வது திரைப்படத்தின் பட பூஜை, மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்துள்ளது.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன கையேடு உணர்வு பூர்வமாக நன்றி கூறிய ரஜினிகாந்த்!

37
Thalapathy 69 Movie Director H Vinoth

Thalapathy 69 Movie Director H Vinoth

ஏற்கனவே இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு, ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் ஆகும். குறிப்பாக நடிகர் அஜித் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் எப்படி தொடர்ந்து நடித்தாரோ, அதே போல் எச் வினோத் இயக்கத்திலும் தொடர்ந்து மூன்று படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

47
Thalapathy 69 heroine is Pooja hedge

Thalapathy 69 heroine is Pooja hedge

ரசிகர்கள் பலரும் எச் வினோத் மற்றும் தளபதி விஜய் காம்போ எப்போது இணையும் என எதிர்பார்த்த நிலையில், அவர்களுடைய கனவை நிறைவேற்றும் விதமாக தற்போது விஜய் மற்றும் எச் வினோத் காம்போவில், 'தளபதி 69' படம் உருவாக உள்ளது. ஏற்கனவே இந்த படம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய தகவல்களையும் படக்குழு அடுத்தடுத்து வெளியிட்டது.

அட்ரா சக்க... 2 வருடத்திற்கு பின் சூப்பர் ஹிட் சீரியலை தூசு தட்டி 2 பாகத்திற்கு பிளான் போட்ட ஜீ தமிழ்!

57
Thalapathy 69 Latest update

Thalapathy 69 Latest update

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை மிகவும் எளிமையான முறையில் போடப்பட்டுள்ளது.  தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக உருவாக உள்ள இந்த படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்காக விஜய்க்கு சுமார் 275 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் இதுவரை விஜய் நடித்த திரைப்படங்களிலேயே, அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் தளபதி 69 படமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

67
Vijay salary in thalapathy 69

Vijay salary in thalapathy 69

மேலும் பாலிவுட் நடிகர் பாபி தியோல் விஜய்க்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரை தவிர நமீதா பைஜூ, கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். கூடிய விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

77
Vijay 69 movie pooja stills

Vijay 69 movie pooja stills

தளபதி விஜயின் 69 ஆவது படத்தின் படப்பிடிப்பு சென்னையில் எளிமையாக நடந்தாலும் அதில் ஒட்டு மொத்த படக்குழுவும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். தளபதி வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved