MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

நயன்தாராவின் ரீல் தங்கை முதல்... காதல் ஜோடி வரை! பிக்பாஸ் சீசன் 8 இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில்... இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் இறுதி லிஸ்ட் வெளியாகியுள்ளது.  

5 Min read
manimegalai a
Published : Oct 04 2024, 01:23 PM IST| Updated : Oct 04 2024, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
118
Bigg Boss tamil

Bigg Boss tamil

விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. முதல் சீசனில் இருந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், அக்டோபர் 6-ஆம் தேதி முதல் துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். தன்னுடைய படத்தின் பணிகள் காரணமாகவும், AI தொழில்நுட்பம் குறித்து அமெரிக்காவுக்கு படிக்க செல்வதாலும் கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை... இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே ப்ரோமோ ஆகியவை வெளியான நிலையில், விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக தொகுத்து வழங்குவாரா? என்பதை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். மேலும் அவ்வப்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த தகவலும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வந்தது. அந்த வகையில் தற்போது இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

218
Jaquline

Jaquline

ஜாக்குலின்:

இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் விஜய் டிவி தொகுப்பாளினியும், பிரபல சீரியல் நடிகையுமான ஜாக்குலின் தான். ஜாக்குலின் சீரியலை தாண்டி, நடிகை நயன்தாராவுக்கு தங்கையாக 'கோலமாவு கோகிலா' படத்திலும் நடித்து பிரபலமானவர். ஏற்கனவே கடந்த 3 சீசன்களாக இவரது பெயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டு வந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

 

318
Dharsha Gupta

Dharsha Gupta

தர்ஷா குப்தா: 

இவரை தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு ஒளிபரப்பான அவளும் நானும், என்கின்ற சீரியலில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா,  பின்னர் முள்ளும் மலரும் , மின்னலே போன்ற தொடர்களில் நடித்தார். அதே போல் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செந்தூர பூவே' சீரியல்,  மற்றும் குக் வித் கோமாளி சீசன் 2 போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில், 2021-ஆம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் படத்தில், ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார்.

டிரெண்டாகும் தளபதி விஜய்யின் கோட் மோதிரம் - யார் பரிசளித்தது தெரியுமா?
 

418
Pavithra Janani:

Pavithra Janani:

பவித்ரா ஜனனி :

விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஆபிஸ் தொடர் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த,  நடிகை பவித்ரா ஜனனி, இதை தொடர்ந்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற சீரியல்களில் கேரக்டர் ரோலில் நடித்தாலும், பின்னர் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய சீரியல்களின் கதாநாயகியாக நடித்து அசத்தி இருந்தார். தற்போது வெள்ளித்திரை வாய்ப்புக்காக, பவித்ரா ஜனனி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

518
Anshitha

Anshitha

அன்ஷிதா:

செல்லம்மா சீரியலில் நடித்து பிரபலமான நடிகை அன்ஷிகா, குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் கோமாளியாக வந்து கலக்கினார். இவர் அக்டோபர் 6-ஆம் தேதி துவங்க உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

சௌந்தர்யாவின் 100 கோடி ரூபாய் சொத்து... மோகன் பாபுக்கு சொந்தமானது எப்படி?

618
Aishwarya

Aishwarya

ஐஸ்வர்யா:

பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளும், விக்ரம், ரஜினிகாந்த் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்த நடிகை ஐஸ்வர்யா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளார். சமீப காலமாக பொருளாதார ரீதியாக பல கஷ்டங்களை சந்தித்து வரும் ஐஸ்வர்யா, வீடு வீடாக சோப்பு விற்பனை செய்வதாக கூறி அதிர வைத்தார். அதே போல் யூடியூப் சேனலில் பல சமையல் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

718
Sunitha:

Sunitha:

சுனிதா:

டான்சரான சுனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துவங்கிய பின்னர், விஜய் டிவியில் புராபர்டியாகவே மாறினார். மேலும் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதன் மூலமாகவும் கல்லா கட்டி வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 5 நிறைவடைந்து விட்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளாராம்.

818
Soundharya:

Soundharya:

சௌந்தர்யா நஞ்சுடன்:

ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான, வேற மாறி ஆபீஸ் என்கிற வலைத் தொடரில்... மிகவும் போல்டான கேரக்டரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர் . கூடுதலாக, அவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் விஷ்ணு விஜய்யின் தோழி ஆவார். இவர் பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்க உள்ளார். 

வாலி முதல் ... நா.முத்துகுமார் வரை; அபூர்வ பறவையின் பெயரை 10 பாடல்களில் பயன்படுத்திய கவிஞர்கள்!

918
Sachana

Sachana

சச்சனா:

விஜய் சேதுபதி நடித்த, 'மகாராஜா' படத்தில், அவருக்கு மகளான நடித்திருந்தவர் தான் சச்சனா. நடித்தது குழந்தை நட்சத்திர வேடம் என்றாலும், தற்போது வயது ஹீரோயின் அளவுக்கு உள்ளதால்.. பட வாய்ப்பை குறிவைத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க உள்ளார்.

1018
Tarshika:

Tarshika:

தர்ஷிகா:

டான்சரான தர்ஷிகா, தென்றல் வந்து என்னை தொடும், சீரியலில் நடித்து பிரபலமானவர். தற்போது பொன்னி சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் திரைப்பட வாய்ப்பை குறிவைத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

1118
Arnav

Arnav

அர்னவ்:

கேளடி கண்மணி, கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான அர்னவ்... தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லமா தொடரில் நடித்து வந்தார். இவர் கேளடி கண்மணி சீரியலில் நடித்த போது, அதில் நடித்த நடிகை திவ்யா ஸ்ரீதரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தை உள்ள நிலையில்... கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் பிரிவுக்கு காரணம், செல்லமா சீரியல் நடிகை அன்ஷிகா என கூறப்படுகிறது. இந்நிலையில்.. அன்ஷிகா மற்றும் அர்னவ் இருவருமே ஜோடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவுக்கு திருமணமா? சோகமான விஷயத்துடன்.. அவரே கூறிய ஹாப்பி நியூஸ்!
 

1218
Arun Prasath

Arun Prasath

அருண் பிரசாத்:

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து பிரபலமானவர் அருண் பிரசாத். அதே போல் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் காதலர் இவர் என கூறப்படுகிறது. அர்ச்சனாவின் சிபாரிசு காரணமாக, அருண் பிரசாத் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என கூறப்படுகிறது.
 

1318
Deepak:

Deepak:

தீபக்:

தொகுப்பாளர், சீரியல் நடிகர், திரைப்பட நடிகர் என மிகவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான.. நடிகர் தீபக் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளாராம். இவர் சமீபத்தில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.
 

1418
Vinoth Babu:

Vinoth Babu:

வினோத் பாபு:

தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் நடித்திருந்த சீரியல் நடிகர் வினோத் பாபு தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இவர் ஸ்டாண்ட் அப் காமெடி மூலம் பிரபலமாகி பின்னர் சீரியல் நடிகராக மாறியவர்.

சமந்தாவுக்காக சண்டைக்கு வந்த சைதன்யா! விவாகரத்து விஷயத்தில் அந்தர் பல்டி அடித்த அமைச்சர் கொண்டா சுரேகா!

1518
TSK

TSK

திருச்சி சரவண குமார்:

TSK என அழைக்கப்படும் திருச்சி சரவணகுமார் ஒரு தொகுப்பாளராக பிரபலமாகி தற்போது வெள்ளித்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் வெளியான லப்பர் பந்து படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு கலக்க உள்ளார்.
 

1618
Paal Dubba:

Paal Dubba:

பால் டப்பா:

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில், ஒரு கானா பாடகர் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் ட்ரெண்டிங் பாடகரான பால் டப்பா பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளாராம்.

1718
Ranjith

Ranjith

ரஞ்சித்:

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும், இயக்குனராகவும் உள்ள ரஞ்சித் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விசித்ரா போல் இவரும், இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுத்து விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சூர்யாவின் இளமை சீக்ரெட்; தினசரி உணவு முறை !

1818
Gokulnath

Gokulnath

கோகுல்நாத்:

நடிகரும் - இயக்குனருமான கோகுல் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். திறமை இருந்தும் சில ஏனோ, முன்னணி இடத்திற்கு வர முடிவது இல்லை. இது கோகுலுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கமல்ஹாசன்
விஜய் சேதுபதி
விஜய் தொலைக்காட்சி
சௌந்தர்யா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved