தக் லைஃப் இயக்குனர் மணிரத்னம் இம்புட்டு பணக்காரரா? அவரின் சொத்து மதிப்பு இதோ
இயக்குனர் மணிரத்னம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Maniratnam Networth
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி இயக்குனர்களில் பலர் சினிமாவிற்குள் வர, ஏதோ ஒரு வகையில் ஊந்துதலாக இருந்தவர் தான் இந்த மணிரத்னம் எனும் மாபெரும் படைப்பாளி. தமிழ் சினிமாவின் தேசிய அடையாளமாக பார்க்கப்படும் மணிரத்னம், அறிமுகமானது என்னவோ கன்னட சினிமாவில் தான். 1983-ல் பல்லவி அனு பல்லவி என்கிற படத்தை கொடுத்த மணிரத்னம், கன்னட அரசின் சிறந்த திரைக் கதாசிரியர் விருதை வென்றார். தமிழில் அவர் இயக்கிய முதல் இரண்டு படங்கள் மணிரத்னம் யார் என கேட்க வைத்தாலும், அவருக்கு அடையாளத்தை கொடுத்தது மெளனராகம் என்கிற கிளாசிக் ஹிட் படம் தான்.
மணிரத்னத்தின் திரை மொழி
இசைஞானியின் இசை, பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவு உறுதுணையாக இருக்க அவரது மேக்கிங் பாராட்டுக்களை பெற்றது. பிரபுவும், கார்த்திக்கும் உச்சத்தில் இருக்கும்போது அக்னி நட்சத்திரம் படம் மூலம் மல்டி ஸ்டார் படமெடுத்து ஹிட் கொடுத்தார். இதனால் மணிரத்னம் மீது இருந்த நம்பிக்கையால் நடிகர் கமல்ஹாசன் அவரை வாண்டடாக அழைத்து செய்த படம் தான் நாயகன். உலகின் சிறந்த 100 படைப்புகளில் ஒன்றாக இப்படம் கொண்டாடப்படுகிறது. கதை, திரைக்கதை தாண்டி படத்தின் ஒவ்வொரு பிரேமும் மணிரத்னத்தின் திரை மொழியை கொண்டாட வைத்தது.
மணிரத்னத்தின் மேஜிக்
கமலுடன் சேர்ந்து பணியாற்றியவர் ரஜினியை மட்டும் விட்டுவிடுவாரா என்ன, சூப்பர்ஸ்டாரையும் மம்முட்டியையும் வைத்து தளபதியை உருவாக்கினார் மணிரத்னம். மாஸ், செண்டிமெண்ட், நட்பு, காதல் என பக்கா கமர்ஷியல் படத்தை கிளாசிக் ஹிட் ஆக கொடுத்தது தான் அவரது சிறப்பு. பின்னர் மாதவன் என்கிற சாக்லேட் பாயை வைத்து அலைபாயுதேவையும் கன்னத்தில் முத்தமிட்டால் என்கிற சீரியஸான கதையையும் கொடுக்க முடியும் என்றால் அதுதான் மணிரத்னத்தின் மேஜிக்.
மணிரத்னம் பேசிய அரசியல்
பாம்பே, ரோஜா, தில்சே ஆகியவை மணிரத்னம் பேசிய அரசியல். குறிப்பாக பாம்பே இந்தியாவே போற்றிய படைப்பு. ஒருவரது வாழ்க்கை அல்லது வரலாற்றை படமாக்குவது மணிரத்னத்தின் வழக்கம். முன்னாள் முதல்வர்களான கருணாநிதி - எம்.ஜி.ஆர் இடையேயான நட்பும், அரசியலையும் இருவர் படம் மூலம் காட்டினார். திருபாய் அம்பானியின் கதையை வைத்து குருவாக்கினார். இராமாயணத்தை வைத்து இராவணனை உருவாக்கினார். பின்னர் கல்கியின் பொன்னியின் செல்வனுக்கு திரையில் உயிர்கொடுத்தார்.
மணிரத்னம் சொத்து மதிப்பு
சினிமாவில் மிகப்பெரிய வெற்றி, அவ்வப்போது சறுக்கல்களை சந்தித்தாலும் ஓயாமல் அடுத்து என்ன இளமையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார் மணிரத்னம். அதற்கு தக் லைஃப் படமே சான்று. இன்று பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ.140 முதல் 150 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக சென்னையில் ஒரு பிரம்மாண்ட பங்களா உள்ளது. அதன் மதிப்பு ரூ.30 கோடி ஆகும். இயக்குனராக மட்டுமின்றி மெட்ராஸ் டாக்கீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன்மூலம் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டி வருகிறார் மணிரத்னம்.