MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொட்டதெல்லாம் 100 கோடி.. தமிழ் சினிமாவை ஆளும் கடவுளின் தேசத்து தேவதை.. மாஸ் காட்டும் மமிதா பைஜூ!

தொட்டதெல்லாம் 100 கோடி.. தமிழ் சினிமாவை ஆளும் கடவுளின் தேசத்து தேவதை.. மாஸ் காட்டும் மமிதா பைஜூ!

Mamitha Baiju: தமிழ் திரையுலகின் புதிய லக்கி லக்கி ஸ்டார் ஆக மாறியுள்ளார் கேரளாவை சேர்ந்த மமிதா பைஜூ. இவர் நடித்த படங்கள் எல்லாம் ரூ.100 கோடி வசூல் மழை பொழிகிறது.

2 Min read
Author : Rayar A
Published : Aug 30 2026, 12:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கடவுளின் தேசத்து தேவதை மமிதா பைஜூ
Image Credit : Sithara Entertainments

கடவுளின் தேசத்து தேவதை மமிதா பைஜூ

தமிழ் திரையுலகை காலம் காலமாக கட்டி ஆள்வது கேரள நடிகைகள் தான். அழகு மட்டுமின்றி நடிப்பிலும் அசத்துவதால் தமிழ் இயக்குநர்கள் கடவுளின் தேசத்து தேவதைகளை தவற விடுவதில்லை. இதற்கு மாபெரும் உதாரணம் கேரளாவில் இருந்து வந்து இப்போது தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகை நயன்தாரா.

அந்த வகையில் இப்போது கடவுளின் தேசத்தில் இருந்து வந்த நடிகை மமிதா பைஜூ தற்போது தென்னிந்திய சினிமாவின் அதிர்ஷ்ட நாயகியாக மாறியுள்ளார். காரணம் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளன. இதனால், கோடிகளில் வசூலைக் குவிக்கும் திரைப்படங்களின் ராசியான நடிகையாக மமிதா பார்க்கப்படுகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஓணத்துக்கு வந்த 2 படங்கள் மெகா ஹிட்
Image Credit : X

ஓணத்துக்கு வந்த 2 படங்கள் மெகா ஹிட்

ஒரே நேரத்தில் பல மொழிகளில் கலக்கி வரும் மமிதா, தற்போது இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இந்த ஓணம் பண்டிகைக்கு வெளியான அவருடைய இரண்டு பெரிய திரைப்படங்களும் பாக்ஸ் ஆபீஸில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அதாவது தமிழில் சூர்யாவுடன் நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', மலையாளத்தில் நிவின் பாலியுடன் நடித்த 'பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்' ஆகிய இரண்டு திரைப்படங்களுக்குமே திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவிலேயே 100 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் இணைந்த இந்தத் திரைப்படங்கள், தற்போது மேலும் பல சாதனைகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

Related Articles

Related image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Related image2
இவளுக்கெல்லாம் 15 கோடி சம்பளமா? ட்ரோல் செய்த ஹேட்டர்ஸுக்கு ‘டியூட்’ மமிதா பைஜூ கொடுத்த கூல் ரிப்ளை..!
34
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மாஸ் ஹிட்
Image Credit : others

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மாஸ் ஹிட்

சூர்யா நடித்த 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் உலகளவில் ஏற்கனவே 200 கோடி ரூபாய் வசூலைக் கடந்துவிட்டது. அதேபோல, நிவின் பாலியின் 'பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்' திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிகரமாக ஓடி, உலகளவில் சுமார் 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற 'பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்' திரைப்படத்தை இயக்கியவர் கிரிஷ் ஏ.டி. மமிதா பைஜூவை இந்தியா முழுவதும் பிரபலமாக்கிய 'பிரேமலு' திரைப்படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார். இவர்களது கூட்டணியில் வெளியான மூன்றாவது திரைப்படம் இதுவாகும்.

ரீனுவாக புகழ பெற்ற மமிதா பைஜூ

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மமிதா பைஜூ, 'பிரேமலு' திரைப்படத்தில் 'ரீனு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் புகழ்பெற்றார். 'பிரேமலு' திரைப்படத்தின் மெகா ஹிட் வெற்றிக்குப் பிறகு அவர் நடித்த 'டூட்', 'ஜனநாயகன்', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'பெத்லஹேம் ஃபேமிலி யூனிட்' எனத் தொடர்ச்சியாக இவர் நடித்த திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன.

44
ரூ.8 லட்சம் டூ ரூ.3 கோடி
Image Credit : Srikara Studios

ரூ.8 லட்சம் டூ ரூ.3 கோடி

திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைந்ததால், மமிதாவின் மார்க்கெட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. 'பிரேமலு' திரைப்படத்திற்கு 8 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய மமிதா, 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படத்திற்குத் தனது சம்பளத்தை 2 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளார். விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்திற்காக 75 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் ஒரு படத்திற்கு 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ராசியான நடிகைக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் முதலிடம் உண்டு. அந்த வகையில் மமிதா பைஜூ தமிழ் திரையுலகில் நீண்ட காலம் ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ் சினிமா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Toxic Box Office Collection: 300 கோடி கூட இன்னும் வரலயா.. டாக்ஸிக் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
Recommended image2
OTT : ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கு ஒரு ட்விஸ்ட்... ஓடிடி-ல இந்தப் படம் பார்த்தா உங்க மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கும்...!
Recommended image3
கமர்ஷியல் கிங் + பிரம்மாண்ட இயக்குனர் கூட்டணி... தோல்விக்கு பின் தரமான கம்பேக் கொடுக்க ரெடியான ஷங்கர் - முருகதாஸ்?
Related Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
இவளுக்கெல்லாம் 15 கோடி சம்பளமா? ட்ரோல் செய்த ஹேட்டர்ஸுக்கு ‘டியூட்’ மமிதா பைஜூ கொடுத்த கூல் ரிப்ளை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved