- Home
- Cinema
- Mamitha Baiju : அன்று சூர்யாவைப் பார்க்க முடியாமல் அழுத சிறுமி... இன்று அதே ஹீரோவுக்கு ஜோடி - கனவு நனவான குஷியில் மமிதா
Mamitha Baiju : அன்று சூர்யாவைப் பார்க்க முடியாமல் அழுத சிறுமி... இன்று அதே ஹீரோவுக்கு ஜோடி - கனவு நனவான குஷியில் மமிதா
Mamitha Baiju About Suriya : விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள மமிதா பைஜு, சிறுவயதில் தான் சூர்யாவை சந்திக்க முடியாமல் போன தருணம் பற்றி பேசி உள்ளார்.

Mamitha Baiju Full Circle Moment
நடிகை மமிதா பைஜுவின் சினிமா பயணத்தில் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம், அவரது ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. சிறு வயதில் தான் மிகவும் ரசித்த நடிகர் சூர்யாவை ஒருமுறையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்த மமிதா, பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஒரு ரசிகையின் நீண்ட நாள் கனவு இப்படியொரு அழகான தருணமாக மாறியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
‘டியூட்’ மமிதாவின் நடிப்பை பார்த்து வாயடைத்துப் போன ‘தாய் கிழவி’ ராதிகா..!
சூர்யாவை பார்க்க முடியாததால் அழுத மமிதா
மமிதா 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, கேரளாவில் உள்ள லுலு மாலுக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சூர்யா வந்திருந்தார். அப்போது சூர்யாவை நேரில் பார்த்து, அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அந்தச் சிறுமியின் மிகப்பெரிய ஆசையாக இருந்துள்ளது. ஆனால், எதிர்பாராத காரணத்தால் அந்த நிகழ்ச்சிக்கு செல்ல அவரது பெற்றோர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் தனக்கு பிடித்த நடிகரை நேரில் சந்திக்கும் வாய்ப்பை மமிதா தவறவிட்டார்.
Vishwanath And Sons படத்தின் கதை இதுதானா? சூர்யா பட டிரெய்லரில் இதெல்லாம் நோட் பண்ணீங்களா?
இன்று சூர்யாவுக்கு ஜோடி
அதே நேரத்தில், மமிதாவின் சகோதரரும் அவரது நண்பர்களும் நிகழ்ச்சிக்கு சென்று சூர்யாவை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் எடுத்த புகைப்படத்தை மமிதாவிடம் காட்டியபோது, “நாமும் அங்கே இருந்திருக்கலாமே” என்ற ஏக்கம் அவருக்கு இன்னும் அதிகமானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு ஆண்டுகள் கடந்தன. அந்த சூர்யா ரசிகை வளர்ந்து, திரையுலகில் நடிகையாகவும் காலடி எடுத்து வைத்தார். மலையாள சினிமா மூலம் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கிய மமிதா பைஜு, தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கினார்.
Suriya : கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூலை ரிலீஸுக்கு முன்பே வாரிசுருட்டிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
மமிதாவின் மாஸ் மொமண்ட்
ஆனாலும், பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட அந்தச் சிறிய ஏக்கம் மட்டும் அவரது நினைவில் இருந்து மறையவில்லை. இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மமிதா மீண்டும் அதே லுலு மாலுக்கு சென்றுள்ளார். ஆனால் இந்த முறை காட்சி முற்றிலும் மாறியிருந்தது. ஒரு காலத்தில் சூர்யாவை பார்ப்பதற்காக அங்கு செல்ல முடியாமல் தவித்த சிறுமி, இன்று அதே சூர்யாவின் படத்தில் கதாநாயகியாக அவருடன் இணைந்து நிற்கிறார்.
மமிதாவின் கனவு நனவானது
அன்று ரசிகையாக தொலைவில் இருந்து பார்க்க நினைத்த நடிகருடன், இன்று கேமராவுக்கு முன்பு இணைந்து நடிக்கும் அளவுக்கு மமிதாவின் பயணம் வளர்ந்துள்ளது. குறிப்பாக, சிறுவயதில் நிறைவேறாமல் போன ஒரு சிறிய ஆசை, பல ஆண்டுகளுக்குப் பிறகு சினிமா வாயிலாகவே நிறைவேறியிருப்பது அவரது பயணத்தில் மறக்க முடியாத அத்தியாயமாக மாறியுள்ளது. ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆசையில் தொடங்கிய கதை, இன்று அதே நட்சத்திரத்துடன் நாயகியாக நடிக்கும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. இதுதான் மமிதா பைஜுவின் உண்மையான ‘ஃபுல் சர்கிள்’ தருணம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

