- Home
- Cinema
- Suriya : கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூலை ரிலீஸுக்கு முன்பே வாரிசுருட்டிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
Suriya : கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூலை ரிலீஸுக்கு முன்பே வாரிசுருட்டிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
Vishwanath and Sons : சூர்யா நடிப்பில் வெங்கட் அட்லூரி இயக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம், ரிலீஸுக்கு முன்பே ப்ரீ-சேல் பிசினஸில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.

Vishwanath and Sons Movie Pre Release Business
நடிகர் சூர்யா நடிப்பில், தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஹிட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் ப்ரீ-சேல் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த படம் ரிலீஸுக்கு முன்பே ப்ரீ-சேல் மூலம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கருப்பு படத்தின் வெற்றியால் தான் இந்த அளவு பிசினஸ் நடந்துள்ளது.
கருப்பால் உயர்ந்த பிசினஸ்
நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய கம்பேக் படமாக கருப்பு அமைந்திருந்தது. அப்படம் கடந்த மே மாதம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியது. நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படமாக கருப்பு அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சூர்யாவின் கெரியர் உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் பிசினஸும் சூடுபிடித்துள்ளது. கருப்பு படத்தை போல் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் என நம்பப்படுகிறது.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு
மலையாள நடிகை மமிதா பைஜு இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் உடன் இணைந்து, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் படத்தை வழங்குகிறது. சமீபத்தில் வெளியான 'பட்டாம்பூச்சி' என்ற முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த துள்ளலான காதல் பாடலில், நாயகி மமிதா பைஜுவின் நடனம் முக்கிய அம்சமாகப் பேசப்படுகிறது.
எப்போ ரிலீஸ்?
சூர்யாவின் 46-வது படமாக உருவாகும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', பிளாக்பஸ்டர் ஹிட்டான 'லக்கி பாஸ்கர்' படத்திற்குப் பிறகு வெங்கி அட்லூரி இயக்கும் படமாகும். இயக்குநர் வெங்கட் அட்லூரியே கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ ஆகியோர் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களைப் பார்க்கும்போது, இது ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்பது தெரிகிறது. படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

