தளபதிக்கு நிகராக ரசிகர்களுடன் ரௌண்டு கட்டி செல்பி எடுத்து மாளவிகா மோகனன்! சமூக வலைத்தளத்தை அலற விட்ட போட்டோஸ்!
நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள 'கிறிஸ்டி' திரைப்படம் பிப்ரவரி 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்து கொண்ட, மாளவிகா மோகனன் ரசிகர்களுடன் ரவுண்டு கட்டி செல்பி எடுத்து கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், தனித்துவமான கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது இவர் மலையாளத்தில் பள்ளி மாணவியாக மாறி நடித்துள்ள திரைப்படம் 'கிறிஸ்டி' இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
'அயலி' வெப் தொடர் அம்மா நடிகை... அனுமோலின் ஹாட் கிளாமர் லுக் போட்டோஸ்!
இந்நிலையில் நாளை மறுநாள் இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகளில் முழு வீச்சில் இறங்கியுள்ளார் மாளவிகா மோகனன். மேலும் ரசிகர்களுடன்... செல்பி எடுத்து கொண்டு அந்த நிகழ்ச்சியையே களைகட்ட செய்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மாளவிகா மோகனனின் இந்த செல்பி-யை பார்த்து ரசிகர்கள், தளபதி விஜய்க்கு நிகராக அவரின் ஹீரோயினும் ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொள்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள், அதே போல் புரொமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த போது அணிந்திருந்த கவர்ச்சிகரமான ரெட் கலர் சேலையிலும் சில ஹாட் புகைப்படங்களை மாளவிகா மோஹனன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தட்டிவிட, அந்த போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகும் இந்த படத்தை தொடர்ந்து, மாளவிகா மோகனன்... தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், உருவாகி வரும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்க, விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், மலை வாழ் மக்கள் கதாபாத்திரத்தில் மாளவிகா மோஹனன் நடிப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் ஆரம்பத்தில், முன்னணி நடிகர்களின் படங்களை டார்கெட் செய்த மாளவிகா... சமீப காலமாக, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதை பார்க்க முடிகிறது.
அட்லீ செய்த செயல்.. செம்ம கோபத்தில் ஷாருக்கான்? இது தான் காரணமா..!