'அயலி' வெப் தொடர் அம்மா நடிகை... அனுமோலின் ஹாட் கிளாமர் லுக் போட்டோஸ்!
சமீபத்தில் ஜீ ஓடிடி தலத்தில் வெளியான, 'அயலி' வெப் சீரிஸில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த நடிகையா இது? என கேள்வி எழுப்பும் அளவிற்கு இவரது ஹாட் கிளாமர் லுக் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
திரைப்படங்களுக்கு நிகரான வரவேற்பு சமீப காலமாக வெப் தொடர்களுக்கும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் வித்தியாசமான, கதையம்சத்துடன் சமீபத்தில் ஜீ ஓடிடி தலத்தில் வெளியான வெப் தொடர் அயலி.
1990-களின் காலகட்டத்தில், நடக்கும் சில மூட நம்பிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்த வெப் தொடர் எடுகாட்டிருந்தது.
வயதுக்கு வந்த பெண்களுக்கு உடனே திருமணம் செய்து வைத்து விட வேண்டும். மேற்கொண்டு அவர்கள் படிக்க கூடாது. என பல கட்டுப்பாடுகள் நிறைந்த கிராமத்தில், ஒரு பெண் தன்னுடைய படிப்பை தக்க வைத்து கொள்ள அம்மாவில் துணையோடு ஒரு கிராமத்தையே எப்படி எதிர்கொள்கிறார் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறி இருந்தார் இயக்குனர்.
இந்த வெப் தொடர் வெளியாகி, தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த தொடரில் நடித்துள்ள நடிகர் - நடிகைகளும் கவனம் பெற்றுள்ளனர்.
அட்லீ செய்த செயல்.. செம்ம கோபத்தில் ஷாருக்கான்? இது தான் காரணமா..!
அதில் முக்கியமானவர், 'அயல்' தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அனுமோல். குறைவான வயதுடைய நடிகை என்றாலும், மிகவும் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
கேரளாவை சேர்ந்த அனுமோல், தமிழில் நடிகர் சத்யராஜ் நடித்த 'ஒரு நாள் இரவு' என்கிற படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், நாடகம் மற்றும் பரதநாட்டியத்தில் கவனம் செலுத்தினார்.
ஆனால் அயலி வெப் தொடர் மூலம் இவருடைய நடிப்பு பலரை கவர்த்துள்ளதால் அடுத்தடுத்து சில படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல் தற்போது நடிகை அனுமோலின் பழைய கிளாமர் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.