அல்ட்ரா மாடர்ன் ஸ்டைலில்... கோட் ஸ்டைலில் கிராப் டாப்பில் லைட்டாக இடையை காட்டி இம்சிக்கும் பிரியா பவானி ஷங்கர்
நடிகை பிரியா பவானி ஷங்கர், காதலர் தினத்தை சிறப்பிக்கும் விதமாக ரெட் ஹாட் அல்ட்ரா மாடர்ன் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்கு தாவி.... மிக குறுகிய காலத்தில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையும், தனித்துவமான கதைகளையும் தேர்வு செய்து நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், காதலர் தினத்தை முன்னிட்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான், சமூக வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய கல்லூரி நண்பர் ஒருவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே, அவ்வப்போது காதலருடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வரும் பிரியா பவானி, காதலர்களின் நிறமாக பார்க்கப்படும் சிவப்பு நிற உடையில் தான் தற்போது செம்ம ஸ்டைலிஷாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்த்திழுத்துள்ளார்.
முன்பை விட, உடல் எடையை குறைத்து சும்மா சிக் என்ற அழகில் இருக்கும் பவானி... தன்னுடைய அழகை மெருகேற்றும் விதமாக, கோட் மாடல் கிராப் டாப் மற்றும் அதற்க்கு மேட்சிங்கான சிவப்பு நிற பேன்ட் அனைத்து போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில், லைக்குகளை குவித்து வருகிறது. மேலும் ரசிகர்கள் பலர் பிரியா பவானி ஷங்கருக்கு தங்களுடைய காதலர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். சுமார் அரை டஜன் படங்களில், அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வரும் பிரியா பவானி, நடிப்பில் அடுத்து 'ருத்ரன்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.