பிரபாஸை தொடர்ந்து 64 வயது நடிகருடன் ஜோடி சேரும் மாளவிகா மோகனன்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வரும் மாளவிகா மோகனன் தன்னுடைய அடுத்த படத்தில் வயதான நடிகருடன் ஜோடி சேர உள்ளார்.

மாஸ்டர் நாயகி மாளவிகா மோகனன்
மலையாள நடிகையான மாளவிகா மோகனன், நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்த படத்திலேயே தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் காம்போவில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மாஸ்டர் வெற்றிக்கு பின்னர் மாளவிகாவுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்தன. அந்த வகையில் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
பான் இந்தியா நடிகையான மாளாவிகா
இதன்பின்னர் பா இரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் ஆதிவாசி பெண்ணாக நடித்து பாராட்டுக்களை பெற்றார் மாளவிகா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில நடித்து பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகை மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் சர்தார் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கும் அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாளவிகா.
இதையும் படியுங்கள்... தாமரை குளம் அருகே தங்கை தாரகை - மாளவிகா மோகனன் போட்டோஸ்!
மாளவிகாவின் அடுத்த படம்
இதுதவிர தெலுங்கில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக ராஜாசாப் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகை மாளவிகா மோகனனுக்கு மலையாளத்தில் பிரம்மாண்ட பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது. அப்படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலுக்கு ஜோடியாக மாளவிகா நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் முதன்முறையாக மோகன்லால் உடன் ஜோடி சேர உள்ளார் மாளவிகா.
மோகன்லால் உடன் நடிக்கும் மாளவிகா மோகனன்
இப்படத்தின் பெயர் ஹிருதயபூர்வம். இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் சத்யன் அத்திக்காடு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 10ந் தேதி தொடங்குகிறது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகிலும் டாப் ஹீரோயினாக உயர்ந்துள்ளார் மாளவிகா. ஏற்கனவே சத்யன் அத்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், இப்படமும் அப்பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மஸ்காரா போட்டு மயக்கும் கவர்ச்சி தேவதை மாளவிகா மோகனன்