லியோவுக்கு போட்டியாக ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த அஜித்... லீக்கானது ஏகே 62 படத்தின் டைட்டில்?
லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் அறிவிப்பு விஜய்யின் லியோ படத்தை போன்று டைட்டிலோடு தான் வெளியாகும் என கூறப்படுகிறது.
நடிகர் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பை இந்த மாதம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்ததால், ஷூட்டிங் தொடங்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவனுக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் படக்குழு மவுனம் காத்து வருகிறது.
ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியிடப்படாவிட்டாலும், அப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் படுஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஆபிஸ் பூஜை கூட கடந்த சில தினங்களுக்கு முன் போடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு அனிருது இசையமைக்க உள்ளதாகவும், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும், நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்.. நயன்தாராவுக்கு என்ன ஆச்சு... சினிமாவை விட்டு விலகும் முடிவில் லேடி சூப்பர்ஸ்டார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தான் வெளியிட உள்ளார்களாம். அதன் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த வாரமே ஷூட்டிங்கையும் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏகே 62 படத்தின் அறிவிப்பு விஜய்யின் லியோ படத்தை போன்று டைட்டிலோடு தான் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்காக மூன்று டைட்டில்களை தேர்வு செய்து வைத்துள்ளாராம் இயக்குனர் மகிழ் திருமேனி. அதில் ஒன்று தான் இறுதி செய்யப்பட்டு வைக்கடும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் டைட்டில் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்துக்கு டெவில் என பெயரிடப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய் படத்துக்கு லியோ என ஆங்கிலத்தில் பெயரிட்டுள்ளதால், ஏகே 62 படக்குழுவும் அதே பாணியில் பெயரிட திட்டமிட்டு இந்த டைட்டிலை தேர்வு செய்து உள்ளார்களாம். மேலும் இப்படம் பான் இந்தியா படமாக ரிலீசாக வாய்ப்புள்ளதால் இந்த தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொருத்தமாக இருக்கும் என்கிற நோக்கத்தில் இப்படி ஒரு தலைப்பை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!