MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாராவுக்கு என்ன ஆச்சு... சினிமாவை விட்டு விலகும் முடிவில் லேடி சூப்பர்ஸ்டார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நயன்தாராவுக்கு என்ன ஆச்சு... சினிமாவை விட்டு விலகும் முடிவில் லேடி சூப்பர்ஸ்டார்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

நயன்தாரா நடிப்புக்கு மட்டுமே முழுக்கு போட உள்ளதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் எனவும் கூறப்படுகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 24 2023, 07:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா, தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் முன்னணி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா, கடந்த ஆண்டு தான் திருமணம் செய்துகொண்டார். அவர் தன் நீண்ட நாள் காதலனான விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கரம்பிடித்தார். திருமணத்துக்கு பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் நயன்.

24

நடிகை நயன்தாராவுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அவர் வாடகைத் தாய் முறையில் இந்த குழந்தைகளை பெற்றுக்கொண்டார். குழந்தை பிறந்த பின்னர் அதனை கவனிப்பதற்காக சில மாதங்கள் சினிமாவில் இருந்து விலகியே இருந்த நயன்தாரா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளார். தற்போது நடிகை நயன்தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு திருமணம்..? பரபரப்பாக நடக்கிறதா ஏற்பாடுகள்..!

34

இதைத் தொடர்ந்து ஜெயம் ரவி உடன் இறைவன், துரை செந்தில்குமார் இயக்கும் படம், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ஒரு படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ள நயன்தாரா, இந்த படங்களில் நடித்து முடித்த பின்னர் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக நயன்தாரா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

44

நயன்தாரா நடிப்புக்கு மட்டுமே முழுக்கு போட உள்ளதாகவும், இருப்பினும் அவர் தொடர்ந்து தயாரிப்பு பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவார் என தகவல்கள் பரவி வருகின்றன. விக்கியும், நயனும் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். அதன்மூலம் ஏராளமான படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். அந்த வகையில் அந்நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக நயன்தாரா நடித்த கனெக்ட் திரைப்படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வேறு வழியே இல்லாமல்... 'ராஜா ராணி 2' சீரியல் உள்ளே வந்த ஆஷா கவுடா! ரியாவை வெளியேற்ற காரணம் இது தான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
யோகி பாபுவின் புதிய காமெடி டிராமா! ரவி மோகன் ஸ்டுடியோஸின் 'An Ordinary Man; தயாரிப்பாளரான கெனிஷா!
Recommended image2
தங்கமயிலின் விஸ்வரூபம்! பாண்டியன் குடும்பத்தை பழிவாங்க துடித்த அம்மா பாக்கியத்திற்கு கொடுத்த மரண அடி!
Recommended image3
கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்: திருடி பட்டம் கட்டிய ஊர் மக்கள்.. மருமகனை போட்டுத்தள்ள துணிந்த மாமியார்; நகை கிடைத்ததா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved