நிலநடுக்கம் வந்தாலும்... நிற்காமல் நடந்த ஷூட்டிங்! காஷ்மீர் ஷெட்யூல் ஓவர்... சென்னைக்கு கிளம்பிய லியோ படக்குழு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு படக்குழுவினர் இன்று சென்னை திரும்பி உள்ளனர்.
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதில் நடிகர் விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க, வில்லன்களாக சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கவுதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி, நடிகர் கதிர், மன்சூர் அலிகான், பிக்பாஸ் பிரபலங்கள் ஜனனி, அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
லியோ படத்தின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. அங்கு ஒரு மாதம் ஷூட்டிங்கை நடத்திய படக்குழு, அதன்பின் அம்மாத இறுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட படக்குழுவினர் உடன் சென்னையில் இருந்து காஷ்மீருக்கு தனி விமானத்தில் சென்றது. அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 2 மாதங்களாக ஷூட்டிங்கை நடத்தி வந்தனர். இடையே பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் சில தினங்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார்.
இதையும் படியுங்கள்... விஜய்யின் லியோ படத்தில் யூடியூபர் இர்பான்..? இவரை வைத்து படத்துல இப்படி ஒரு டுவிஸ்ட் வேற இருக்கா..!
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்று வந்த லியோ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இன்று மதியம் படக்குழுவினர் அனைவரும் காஷ்மீரில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு திரும்பி உள்ளனர். லியோ படக்குழுவினர் ஏர்போர்ட்டில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லியோ படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஷூட்டிங்கை முடித்துவிட்டு காஷ்மீரில் இருந்து சென்னைக்கு திரும்பி உள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படி பக்கா பிளான் உடன் லியோ ஷூட்டிங்கை எடுத்து வரும் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன. லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் வருகிற ஏப்ரல் மாதம் நடத்த உள்ளனர்.
இதையும் படியுங்கள்... விஜய் பட ஹீரோயின்களின் கவர்ச்சி நடனத்துடன் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் திருவிழா - அந்த 2 பேர் யார் தெரியுமா?