விஜய்யின் லியோ படத்தில் யூடியூபர் இர்பான்..? இவரை வைத்து படத்துல இப்படி ஒரு டுவிஸ்ட் வேற இருக்கா..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ பட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், தற்போது யூடியூபர் இர்பானும் அதில் இணைந்துள்ளார் போல தெரிகிறது.
விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதுவிர பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் கவுதம் மேனன், ஆக்ஷன் கிங் அர்ஜு, வில்லன் நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் மிஷ்கின், நடன இயக்குனர் சாண்டி, பிக்பாஸ் பிரபலம் ஜனனி, நடிகை பிரியா ஆனந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்திய படக்குழு, அடுத்தகட்டமாக தற்போது காஷ்மீரில் ஷூட்டிங்கை நடத்தி வருகிறது. இதற்காக கடந்த 2 மாதங்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அங்கு தங்கி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதனிடையே நேற்று இரவு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் லியோ படக்குழு என்னாச்சோ, ஏதாச்சோனு பதறிப்போய் ரசிகர்கள் டுவிட்டரில் கேள்வி எழுப்ப, நாங்க பத்திரமா இருக்கோம் நண்பா என டுவிட்டை தட்டிவிட்டு தாறுமாறு செய்தது லியோ தயாரிப்பு நிறுவனம்.
இதையும் படியுங்கள்... துணை நடிகர்களிடம் கமிஷன் அடிச்சிருக்கான்... இப்படி பண்ணா விளங்குமா? - அட்லீயை டார்டாராக கிழித்த கே.ராஜன்
நிலநடுக்கம் வந்தாலும் பரவாயில்லை என இன்று மீண்டும் ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார் லோகேஷ் கனகராஜ். அவரை லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த பிரபல யூடியூபர் இர்பான் அவருடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் லியோ படத்தில் நடிக்க சென்றாரா அல்லது காஷ்மீரை சுற்றிப்பார்க்க சென்றாரா என்பதே இன்னும் உறுதியாக தெரியாத நிலையில், படத்தில் அவரது கேரக்டர் என்னவாக இருக்கும் என்பது வரை நெட்டிசன்கள் யூகிக்க தொடங்கி உள்ளனர்.
அதன்படி லியோ படத்தில் நடிகர் விஜய் நடத்தி வரும் பேக்கரியில் இர்பான் ரிவ்யூ செய்ய செல்வார் என்றும், அப்போது அங்கு அவர் எடுத்த வீடியோவை யூடியூப்பில் பார்த்த எதிரிகள் அவரை தேடி வந்து பழிவாங்குவர் என்றும், படத்தில் முக்கியமான டுவிஸ்ட் வைக்க போறதே இர்பான் தான் என்றும் அடுக்கடுக்கான கட்டுக்கதைகளை நெட்டிசன்கள் அள்ளிவீசி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இந்த மனசு யாருக்கு வரும்... தசரா படக்குழுவுக்கு ஒரு கிலோ தங்கத்தை பரிசாக வாரி வழங்கிய கீர்த்தி சுரேஷ்