லாக்டவுன் முதல் வா வாத்தியார் வரை... இந்த வார தியேட்டர் & OTT வெளியீடுகள் ஒரு பார்வை
அனுபமா பரமேஸ்வரன் நடித்த லாக்டவுன் முதல் கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் வரை இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

தியேட்டர் ரிலீஸ் படங்கள்
ஜனவரி 30-ந் தேதி தியேட்டரில் நான்கு தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று நடிகர் விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ். மெளனப் படமான இதில் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இதுதவிர அட்டக்கத்தி தினேஷ் ஹீரோவாக நடித்துள்ள கருப்பு பல்சர் திரைப்படமும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளது. மேலும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவாகி இருக்கும் லாக்டவுன் திரைப்படமும் ஜனவரி 30ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனுடன் கிஷோர் நடித்துள்ள மெல்லிசை என்கிற சிறு பட்ஜெட் படமும் ரிலீஸ் ஆகிறது.
ஓடிடி ரிலீஸ் படங்கள்
வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் வா வாத்தியார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படம் திரையரங்கில் அட்டர் பிளாப் ஆன நிலையில், இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. ஜனவரி 28-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
டேக் தட் (ஆவணத் தொடர்)
பிரிட்டனின் புகழ்பெற்ற பாய் பேண்ட் 'டேக் தட்' பயணத்தை இந்த மூன்று பாக ஆவணப்படம் காட்டுகிறது. அவர்களின் 35 வருட வெற்றி, கருத்து வேறுபாடுகள், மீண்டும் இணைந்தது என அனைத்தும் இதில் உள்ளது. 90களின் இசை பிரியர்களுக்கு இது ஒரு சிறந்த விருந்து. இந்த ஆவணத் தொடர் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 27 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
பிரிட்ஜெர்டன் – சீசன் 4 (பகுதி 1)
இந்த சீசனில் பெனடிக்ட் பிரிட்ஜெர்டனின் காதல் கதை இடம்பெறுகிறது. ஒரு முகமூடி விழாவில் அவர் சந்திக்கும் சோஃபி பேக்கின் கதைதான் முக்கியம். கற்பனை மற்றும் யதார்த்தம் என்ற கருப்பொருளுடன் இந்த சீசன் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. காதல், டிராமா விரும்பிகளுக்கு இது கட்டாயம் பார்க்க வேண்டிய தொடர். இந்த வெப் சீரிஸ் நெட்ஃபிக்ஸில் ஜனவரி 29 முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
இந்த வார ஓடிடி வெளியீடுகள்
துரந்தர்
ரகசிய 'ரா' ஏஜென்டாக ரன்வீர் சிங் நடித்துள்ள இந்த ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர், நிஜ வாழ்க்கை பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது. திரையரங்குகளில் பெரும் வெற்றி பெற்ற இப்படம் இப்போது ஓடிடிக்கு வருகிறது. இப்படம் நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் ஜனவரி 30 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
சாம்பியன்
ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் நடித்த லேட்டஸ்ட் படம் 'சாம்பியன்'. அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் இப்போது ஓடிடிக்கு வருகிறது. ஜனவரி 29-ந் தேதி நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தி ரெக்கிங் க்ரூ
ஹவாய் பின்னணியில் அமைந்த இந்த ஆக்ஷன் த்ரில்லரில் ஜேசன் மோமோவா மற்றும் டேவ் பாடிஸ்டா நடித்துள்ளனர். தந்தையின் மரணத்திற்குப் பின் வெளிப்படும் ரகசியங்கள் கதையை விறுவிறுப்பாக்குகின்றன. ஆக்ஷன் பட பிரியர்களுக்கு இது சரியான தேர்வு. இது பிரைம் வீடியோவில் ஜனவரி 28ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
ஜனவரி 30ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
சர்வம் மயா
நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் சர்வம் மயா. இப்படம் இந்த வாரம் ஓடிடிக்கு வருகிறது. ஜனவரி 30ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் காண கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தல்தல்
விஷ் தாமிஜாவின் நாவலை அடிப்படையாகக் கொண்ட இந்த க்ரைம் த்ரில்லரில் பூமி பெட்னேகர் டிசிபி ரீட்டா ஃபெரேராவாக நடிக்கிறார். ஒரு தொடர் கொலையாளியைப் பிடிக்கும் முயற்சியில் அவர் எதிர்கொள்ளும் மனப் போராட்டமே கதை. புலனாய்வு டிராமாக்களை விரும்புபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். இது பிரைம் வீடியோவில் ஜனவரி 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
தேவ்கேல்
மராத்தி சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லரான இந்தத் தொடர், ரத்னகிரி கடலோர கிராமத்தில் நடக்கும் மர்ம மரணங்களைச் சுற்றி வருகிறது. பௌர்ணமி அன்று நடக்கும் மரணங்களை கிராம மக்கள் தெய்வத்தின் தண்டனையாக நம்புகிறார்கள். நம்பிக்கை மற்றும் தர்க்கம் என்ற கோணத்தில் கதை நகர்கிறது. இது ZEE 5 ஓடிடி தளத்தில் ஜனவரி 30 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

