ஜூன் 2025-ல் தமிழில் வெளியாகவுள்ள திரைப்படங்களின் பட்டியல்.!
ஜூன் 2025 வெளியாகவுள்ள தமிழ்ப்படங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

படை தலைவன் (Padai Thalaivan)
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படம் தான் ‘படை தலைவன்’. காடுகளுக்கும், யானைகளுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பு பற்றி இந்த படம் பேசுகிறது. படம் மே மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது.
குபேரா (Kubera)
தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தனுஷின் 51வது திரைப்படமான ‘குபேரா’ தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் (Chennai City Gangsters)
இயக்குனர் அருண் கேசவ், விக்ரம் ராஜேஸ்வரர் ஆகியோர் இயக்கத்தில் வைபவ், அதுல்யா ரவி, சுனில் ரெட்டி, ரெட்டின் கிங்சிலி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், மணிகண்டன் ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’. இந்த திரைப்படம் வருகிற ஜூன் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
மார்கன் (Maargan)
விஜய் ஆண்டனி, சமுத்திரக்கனி, பிரிகிடா சாகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் தான் ‘மார்கன்’. நகரத்தில் குப்பை தொட்டிகளில் இருந்து உடல்கள் முழுவதும் கருப்பான நிலையில் சடலங்கள் மீட்கப்படுகிறது. அந்த கொலைகளை செய்தது யார்? எதற்காக கொலைகள் நடத்தப்பட்டது? என்பது தான் இந்த படத்தின் கதை. இந்த படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது.
பிசாசு 2 (Pisasu 2)
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் ‘பிசாசு’. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சிமணி ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. வருகிற ஜூன் 30 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr.Zoo Keeper)
சின்னத்திரை நடிகர் புகழ் நடித்துள்ள ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ திரைப்படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது. இந்த திரைப்படம் உருவாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் சில காரணங்களால் வெளியீடு தள்ளிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் வருகிற 27 ஆம் தேதி வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஜூன் மாதம் வெளியாகும் பிற படங்கள்
இது மட்டுமல்லாமல் தனி ஒருவன், டீசல், 7ஜி ரெயின்போ காலனி பாகம் 2, ரெட்ட தல, காஞ்சனா 4, இதயம் முரளி, ரிவால்வர் ரீட்டா, பென்ஸ், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது .ஆனால் இந்த படங்களின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்ட அனைத்து படங்களின் வெளியீட்டு தேதிகள் படக்குழுவினரால் மாற்றத்திற்கு உள்ளாகலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.