- Home
- Cinema
- அஜித்தைப் போல் கார் மீது மோகம் கொண்ட அனுஷ்கா... வீட்டில் இத்தனை சொகுசு கார்கள் வைத்திருக்கிறாரா? - முழு விவரம்
அஜித்தைப் போல் கார் மீது மோகம் கொண்ட அனுஷ்கா... வீட்டில் இத்தனை சொகுசு கார்கள் வைத்திருக்கிறாரா? - முழு விவரம்
நடிகர் அஜித்தைப் போல் கார் மீது அலாதி பிரியம் கொண்ட நடிகை அனுஷ்கா பல்வேறு சொகுசு கார்களை வைத்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, தமிழிலும் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் தேவசேனையாக நடித்து அசத்திய அனுஷ்கா அப்படத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அவரது உடல் எடை அதிகரித்தது தான் இதற்கு காரணம்.
நடிகர் அஜித்தைப் போல் கார் மீது அலாதி பிரியம் கொண்டவராக இருந்து வந்துள்ளார் நடிகை அனுஷ்கா. அவரிடம் பல்வேறு சொகுசு கார்கள் உள்ளன. அதைப்பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகை அனுஷ்காவிடம் உள்ள விலையுயர்ந்த கார் என்றால் அது பி.எம்.டபிள்யூ 6 சீரிஸ் கார் தான். கிட்டத்தட்ட ரூ.75 லட்சம் மதிப்புள்ள இந்த கார் இந்தியாவில் 2021-ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டதாகும். இது அறிமுகமான புதிதிலேயே வாங்கிவிட்டாராம் அனுஷ்கா.
இதையும் படியுங்கள்... நயன்தாரா முதல் பூஜா ஹெக்டே வரை... பிரியாணி வெறியர்களாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட் இதோ
இதற்கு அடுத்தபடியாக 5 சீட்டர் எஸ்.யூ.வி கார் ஒன்றையும் சொந்தமாக வைத்துள்ளார் அனுஷ்கா. Audi-யின் Q5 மாடலான இதன் விலை ரூ.65 லட்சம் இருக்குமாம். வெகுதூர பயணங்களுக்காக இந்த காரை நடிகை அனுஷ்கா பயன்படுத்துவாராம். இந்த கார் கடந்த 2021-ம் ஆண்டு லான்ச் செய்யப்பட்டதாகும்.
அனுஷ்காவின் கார் கலெக்ஷன்களில் அடுத்ததாக உள்ள கார் Audi A6. இதன் விலையும் ரூ.65 லட்சம் இருக்கும். இந்த கார் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதாகும். இது 5 சீட்டர் வசதி கொண்ட சொகுசு கார் ஆகும்.
நடிகை அனுஷ்காவிடம் உள்ள விலை குறைந்த கார் என்றால் அது டொயோட்டா கொரோல்லா ஆல்டிஸ் தான். பெட்ரோல் வேரியண்ட்டான இதன் மதிப்பு ரூ.19 லட்சம் ஆகும். ஷூட்டிங்கிற்கு செல்ல நடிகை அனுஷ்கா அதிகளவு பயன்படுத்தும் கார் இதுவாகும். இது அவரின் பேவரைட் கார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படியுங்கள்... தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் கெத்து காட்டிய கமல் - எந்த படமும் செய்திராத மாபெரும் சாதனை படைத்த விக்ரம்