நயன்தாரா முதல் பூஜா ஹெக்டே வரை... பிரியாணி வெறியர்களாக இருக்கும் நடிகைகளின் லிஸ்ட் இதோ
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதல் பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே வரை பிரியாணியை விரும்பி சாப்பிடும் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக பிரியாணி என்பது ஏராளமானோருக்கு பிடித்தமான உணவாக உள்ளது. இதன் காரணமாகவே இதன் மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த பிரியாணி தான் முன்னணி நடிகைகள் பலருக்கும் பேவரைட் உணவாக இருக்கிறது. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள என்னதான் டயட் இருந்தாலும், பிரியாணியை பார்த்ததும் டயட்டையெல்லாம் ஓரங்கட்டி வைத்துவிடும் நடிகைகள் ஏராளம்.
அந்த வகையில் பிரியாணியை விரும்பி சாப்பிடும் நடிகைகளைப் பற்றி தற்போது பார்க்கலாம். முதலாவதாக தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவுக்கு மிகவும் பிடித்த உணவு பிரியாணி தானாம். இதுதவிர சைனீஸ் மற்றும் கடல் உணவுகளையும் அவர் விரும்பி சாப்பிடுவாராம்.
இதையும் படியுங்கள்... தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் கெத்து காட்டிய கமல் - எந்த படமும் செய்திராத மாபெரும் சாதனை படைத்த விக்ரம்
அதேபோல் நடிகை ஜோதிகாவுக்கும் பேவரைட் டிஸ் என்றால் அது பிரியாணி தான். அவற்றில் பலவகை இருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்தது ஹைதராபாத் பிரியாணி தானாம். கடையில் வாங்கி ருசிப்பதை விட வீட்டில் சமைத்து சாப்பிடுவது தான் அவருக்கு மிகவும் பிடிக்குமாம். நடிகை காஜல் அகர்வாலும் இந்த லிஸ்டில் இருக்கிறார். அவருக்கும் பிரியாணி என்றால் ரொம்ப இஷ்டமாம்.
பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவும் ஒரு பிரியாணி பிரியராம். பிட்னஸில் ஆர்வமாக இருந்தாலும், பிரியாணியை பார்த்தால் அதையெல்லாம் மறந்து விடுவாராம், அந்த அளவுக்கு பிரியாணி மேல் அவருக்கு காதல் உள்ளதாம். மில்க் பியூட்டி என்றழைக்கப்படும் தமன்னாவுக்கும் பிரியாணி தான் பேவரை உணவாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சமந்தா போன்ற 16 முன்னணி நடிகைகளின் அதிர்ஷ்டம் பொங்கும் ராசிகள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.