- Home
- Cinema
- தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் கெத்து காட்டிய கமல் - எந்த படமும் செய்திராத மாபெரும் சாதனை படைத்த விக்ரம்
தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் கெத்து காட்டிய கமல் - எந்த படமும் செய்திராத மாபெரும் சாதனை படைத்த விக்ரம்
Vikram OTT Record : தியேட்டர்களில் அமோக வ்ரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் கடந்த ஜூலை 8-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியிடப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 4 ஆண்டு இடைவெளிக்கு பின் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படத்தில் கதாபாத்திர தேர்வு, அனிருத்தின் இசை ஆகியவை மிகப்பெரிய பலமாக அமைந்தன. விஜய் சேதுபதியின் சந்தனம் கேரக்டர், பகத் பாசிலின் அமர் கேரக்டர், நரேனின் பிஜாய் கேரக்டர் என ஒவ்வொன்றும் மனதில் பதியும்படி இருந்தன.
குறிப்பாக வசந்தி நடித்த ஏஜெண்ட் டீனா மற்றும் சூர்யா நடித்த ரோலெக்ஸ் ஆகிய கேரக்டர்கள் இப்படத்தில் கொஞ்சம் நேரம் வந்தாலும் அவை ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பெரிது. இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது. உலகளவில் ரூ.440 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... ‘கோப்ரா’வில் ஏழு கேரக்டர்களுக்கும் வித்தியாசமாக பின்னணி பேசி இருக்கும் சீயான் விக்ரம்!!
தியேட்டர்களில் அமோக வரவேற்பை பெற்ற விக்ரம் திரைப்படம் கடந்த ஜூலை 8-ந் தேதி ஓடிடி-யில் வெளியிடப்பட்டது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம் அதிலும் சாதனை படைத்துள்ளது. அதன்படி வெளியான முதல் வாரத்திலேயே ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற படம் என்கிற சாதனையையும், அதிக சந்தாதாரர்கள் மற்றும் அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் போன்ற பல்வேறு சாதனைகளை விக்ரம் படைத்துள்ளது.
இதுவரை ஹாட்ஸ்டாரில் வெளியான படங்களில் எந்த ஒரு படமும் நிகழ்த்தாத மாபெரும் சாதனையை இப்படம் நிகழ்த்திக் காட்டி உள்ளது. தியேட்டரை தொடர்ந்து ஓடிடி-யிலும் விக்ரம் படம் சாதனை படைத்து வருவதனால் படக்குழுவினரும், நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... துளியும் மேக்கப் இன்றி... மூன் லைட் வெளிச்சத்தில் மின்னும் நட்சத்திரமாய் மூட் அவுட் செய்யும் திவ்ய பாரதி!!