MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Leo - LCU கனெக்‌ஷனுக்காக லோகேஷ் கனகராஜ் போட்ட பிளான்.. நோ சொன்ன விஜய்.. கடைசில நடந்ததே வேற..

Leo - LCU கனெக்‌ஷனுக்காக லோகேஷ் கனகராஜ் போட்ட பிளான்.. நோ சொன்ன விஜய்.. கடைசில நடந்ததே வேற..

தற்போது சமீபத்தில் வெளியான லியோ படமும் LCU-வில் இணைந்துள்ளது. ஆனால் லியோவின் LCU கனெக்‌ஷன் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

2 Min read
Author : Ramya s
| Updated : Oct 25 2023, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
marvel

marvel

மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் (MCU) மற்றும் டிசி எக்ஸ்டெண்டட் யுனிவர்ஸ் (DCEU) மூலம் சினிமா யுனிவெர்ஸ் தற்போதைய தலைமுறையில் பிரபலமடைந்திருக்கலாம், ஆனால் சினிமா யுனிவெர்ஸின் வரலாறு நீண்ட நெடியது. ஆம். 1930கள் மற்றும் 40களில், ஃபிராங்கண்ஸ்டைன் மற்றும் தி மம்மி போன்ற திரைப்படங்களைக் கொண்டு கிராஸ்ஓவர் யுனிவெர்ஸை உருவாக்கப்பட்டது, அவை கூட்டாக யுனிவர்சல் மான்ஸ்டர்ஸ் என்று அழைக்கப்பட்டன. 

28

இந்திய சினிமாவை பொறுத்தவரை யுனிவெர்ஸ் என்ற கான்செப்ட் புதிது என்றாலும், படிப்படியாக சில யுனிவர்ஸ் உருவாகின. பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டியின் போலீஸ் யுனிவெர்ஸ், யாஷ்ராஜ் ஸ்பை யுனிவர்ஸ் போன்றவற்ற உதாரணமாக சொல்லலாம்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

38
KAITHI

KAITHI

ஆனால் லோகேஷ் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான விக்ரம் படத்திற்கு பிறகு LCU என்று அழைக்கப்படும் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் தான் ரசிகர்களின் கவனத்தை பெருமளவு ஈர்த்தது.. கைதி விக்ரம் படத்தை இணைத்து LCU என்ற யுனிவெர்ஸ் உருவான நிலையில், தற்போது சமீபத்தில் வெளியான லியோ படமும் LCU-வில் இணைந்துள்ளது. ஆனால் லியோவின் LCU கனெக்‌ஷன் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

48

லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தாலும், ஜென்ரல் ஆடியன்ஸ் பலரும் LCUவில் இந்த படம் வலுக்கட்டாயமாக திணக்கப்பட்டது போல் உள்ளதாக விமர்சித்து வருகின்றனர். போதைப்பொருள் வியாபாரம், ,இரவு நேர சேசிங் காட்சிகள் மற்றும் மிரட்டும் பின்னணி இசை என லியோ படம், LCU படங்களின் வழக்கமான படங்களை சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

58

இருப்பினும், பார்வையாளர்கள் லியோவில் இடம்பெற்றுள்ள LCU கேரக்டர்களை ரசிக்கவில்லை. உதாராணமாக மரியம் ஜார்ஜ், மாயா கிருஷ்னன் ஆகியோர் லியோவில் கேமியோவாக நடித்துள்ளனர். ஆனால் லியோ படத்தில் அவர்களின் இருப்பு கதைக்கு வலு சேர்க்கவில்லை என்றும், முந்தைய படங்களுடனான இணைப்பு லியோவில் கட்டாயப்படுத்தப்பட்ட விஷயமாக உள்ளது என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.

68

லியோவில் பார்த்திபனின் வீட்டுக்கு காவலுக்கு வரும் நெப்போலியன்,  பார்த்திபனின் காஃபி ஷாப்பை பார்வையிடும் மாயா கிருஷ்ணன், விக்ரமின் உளவாளிகள் குழுவில் சேர்ந்தது, படத்தின் இறுதியில், விக்ரமிடமிருந்து (கமல்ஹாசன்) பார்த்திக்கு வரும் செல்ஃபோன் அழைப்பு ஆகியவை மட்டுமே LCUக்கான இணைப்புகளாக இருந்தன.

தம்மாத்தூண்டு ரோலுக்கு பில்டப் எதுக்கு... வாங்க பாலஸ்தீன போருக்கு போலாம் - லோகேஷுக்கு மன்சூர் அலிகான் அழைப்பு
 

78
Producer Lalith Kumar reveals about Vijays Leo and Suriyas Rolex

Producer Lalith Kumar reveals about Vijays Leo and Suriyas Rolex

ஆனால் விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது போல் கமல்ஹாசனும் ஒரு கேமியோவில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. எனவே லியோவில் LCU-வில் இடம்பெற்றாலும் அது ரசிகர்கள் மத்தியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாகவே லியோ - LCU கனெக்‌ஷன் தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை வெளியிட்டு பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். 

88
karthi new movie kaithi

karthi new movie kaithi

இதனிடையே லியோ குறித்த மற்றொரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது. கைதி படத்தில் தில்லி என்ற கேரக்டரில் நடித்திருந்த கார்த்தியை லியோ படத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார் என்று கூறப்படுகிறது, ஆனால் விஜய் அதற்கு மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் மன்சூர் அலிகான் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டது என்று ஒரு தகவல் வலம் வருகிறது. ஆனால் இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
சூர்யா - ஹெச். வினோத் மெகா கூட்டணி! புதிய படத்தின் அப்டேட்? ரசிகர்கள் குஷி!"
Recommended image2
கணவருக்கு காஸ்ட்லி பைக்; ரேவதியின் சர்ஃப்ரைஸ் கிஃப்ட்: காரணம் என்ன? கார்த்திகை தீபம் எபிசோடு அப்டேட்!
Recommended image3
Now Playing
AI-யையே மிஞ்சும் வேகம்! 45 நிமிடங்களில் 9 பாடல்களை செதுக்கிய இளையராஜா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved