தம்மாத்தூண்டு ரோலுக்கு பில்டப் எதுக்கு... வாங்க பாலஸ்தீன போருக்கு போலாம் - லோகேஷுக்கு மன்சூர் அலிகான் அழைப்பு
லியோ படத்தில் இருதயராஜ் டிசோசாவாக நடித்துள்ள மன்சூர் அலிகான், இயக்குனர் லோகேஷ் கனகராஜை போருக்கு அழைத்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
Mansoor Alikhan, Lokesh Kanagaraj
தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் மன்சூர் அலிகான். தற்போது தமிழ் சினிமாவில் டாப் இயக்குனராக உள்ள லோகேஷ் கனகராஜுக்கும் பிடித்த இயக்குனர் இவர்தான். கைதி படத்தின் கதையை மன்சூர் அலிகானை மனதில் வைத்து தான் எழுதி உள்ளார் லோகேஷ். அந்த சமயத்தில் மன்சூர் அலிகான் கைதாகி நிஜமாகவே சிறை சென்றதால் அவரால் கைதி படத்தில் நடிக்க முடியாமல் போனது.
Mansoor Alikhan, vijay
மன்சூர் அலிகானுக்காக எழுதிய அந்த கதையில் தான் பின்னர் கார்த்தியை நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார் லோகி. இருப்பினும் மன்சூர் அலிகானுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆவலோடு இருந்த லோகேஷ் கனகராஜ், லியோ படம் மூலம் தன் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அப்படத்தில் மன்சூர் அலிகானை இருதயராஜ் டிஸோசா என்கிற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை சிறைக்கைதியாக நடிக்க வைத்திருந்தார் லோகி.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Mansoor Alikhan in Leo
லியோ படத்தின் இரண்டாம் பாதியில் மன்சூர் அலிகான், லியோ தாஸ் பற்றி சொல்லுவது தான் அப்படத்தில் பல்வேறு டுவிஸ்ட்டுகளுக்கு உதவி இருக்கும். ஆனால் மன்சூர் அலிகானுக்கு பெரியளவில் ஸ்கோர் செய்ய வாய்ப்பு இப்படத்தில் வழங்கப்படவில்லை. அந்த ஜெயில் சீனை தவிர்த்து விஜய்யின் லியோ தாஸ் கேரக்டர் உடன் வரும் ஒரு சாதரண கதாபாத்திரமாகவே அதை கொண்டு சென்றிருப்பார் லோகேஷ் கனகராஜ்.
Mansoor Alikhan leo clicks
இந்த நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாலஸ்தீன போருக்கு அழைத்து மன்சூர் அலிகான் பேசி உள்ளது வைரலாகி வருகிறது. அதன்படி அவர் கூறியதாவது : “500 கோடி ரூபாய் பணத்தை போட்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்து ரூ.1000 கோடி வசூலுக்காக உழைக்கிறோம், ஆனா அரசியல்வாதிகள் ஒரே ஒரு கையெழுத்தை போட்டுட்டு ஆயிரம் கோடி, 2000 கோடினு ஆட்டையப்போடுறான்.
லோகேஷ் என்ன வச்சு அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்ல, அதைவிட்டுட்டு, தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப் கொடுத்துட்டு இருக்கீங்க. இல்லேனா வாங்க பாலஸ்தீனத்துக்கு விடுதலை வாங்கித்தரலாம். 500 மிலிட்டரி டேங்கர், 500 போர் விமானங்களை எடுத்துட்டு வாங்க போருக்கு போய் அங்குள்ள எல்லா மிலிட்டரி தளங்களையும் அழிச்சிட்டு வருவோம். பாவம் அப்பாவிங்கலாம் சாகுறாங்க. சும்மா, டம்மி துப்பாக்கியையும், அட்டக்கத்தியையும் கொடுத்துக்கிட்டு, வாங்க போருக்கு போகலாம் லோகேஷ்” என அழைத்துள்ளார் மன்சூர் அலிகான்.
இதையும் படியுங்கள்... வசூலில் சரிவை சந்தித்ததா லியோ?... உலகளவில் 6 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு? முழு விவரம் இதோ