- Home
- Cinema
- Laila new movie : கார்த்தி உடன் கைகோர்க்கும் 90 ஸ் கனவுக்கன்னி!16 வருடம் கழித்து ரீ-என்ட்ரி..
Laila new movie : கார்த்தி உடன் கைகோர்க்கும் 90 ஸ் கனவுக்கன்னி!16 வருடம் கழித்து ரீ-என்ட்ரி..
Laila new movie : 90 களின் பிற்பகுதியில் இளசுகளை சுண்டி இழுத்த நாயகிகளில் பிரபலமானவர் லைலா..அவரது சிரிப்பிற்கு இன்றும் ரசிகர்கள் உண்டு.

laila
கடந்த 1996-ல் எஸ்வி கிருஷ்ணா ரெட்டி இயக்கிய எகிரே பவுரமா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமாகிய லைலா தனது க்யூட் நடிப்பால் தமிழ் திரைப்படங்களில் நடிக்க முக்கிய இயக்குனர்களிடமிருந்து வாய்ப்புகளை பெற்றுக்கொண்டார்.
laila
பல வாய்ப்புகள் குவிந்த நிலையில் தனி நாயகியாக வரும் படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என முடிவெடுத்த இவர், கே.எஸ்.ரவிக்குமார், பவித்ரன் படங்களை நிராகரித்துள்ளார். அதோடு விஐபி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பின்னர் இரு நாயகிகளில் ஒருவராக நடிக்க வேண்டியிருப்பதை அறிந்த பிறகு அந்த படத்திலிருந்து விலகி விட்டார்.
laila
காத்திருப்பிற்கு பிறகு லைலா 2001 - ஆம் ஆண்டு வெளியான அஜித்துடன் தீனா படத்திலும் , பிரசாந்துடன் பார்த்தேன் ரசித்தேன் படத்திலும் நாயகியாக அசத்தியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Dhanush : காமெடி படம் இயக்க தயாராகும் தனுஷ் - யார் யாரெல்லாம் நடிக்க போறாங்க தெரியுமா?
laila
இதையடுத்து விக்ரம் நாயகனாக நடித்த தில் படத்தில் சுடிதார் பெண்ணாக அசத்தியவர். பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை மிரள வைத்திருந்தார். நயனை இழந்த பிறகு லைலாவின் ஆளுகை இன்றும் பாரின் கண்களிலும் நிலைத்து நின்ற காட்சியாகும்.
laila
சில காலம் ஓய்விற்கு பிறகு மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பிய லைலா 'உள்ளம் கேட்குமே' திரைப்படத்தில் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. பற்களில் கிளிப் மாட்டி தத்தை பேச்சுடன் அவர் நடிப்பு பாராட்டுக்களை குவித்து.
laila
முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்த லைலா..கடந்த 2006 -ஆம் ஆண்டு தொழிலதிபரான மெஹ்தியை மணந்தார். எட்டு ஆண்டு காதலுக்கு பிறகு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...sivakarthikeyan : மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ரூ.4 கோடி சம்பள பாக்கி- தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு
laila
திருமணத்திற்கு பிறகு திரையில் தோன்றுவதை நிறுத்தி விட்ட லைலா கடந்த 2018 ஆம் ஆண்டு பால் விளம்பரத்தில் தோன்றினார். அதோடு ஜீ தமிழில் டிஜேடி ஜூனியர்ஸ் என்ற நடன நிகழ்ச்சியில் நடிகைகள் சுதா சந்திரன் மற்றும் சினேகாவுடன் நடுவராக பங்கேற்றார்.
laila
இந்நிலையில் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில் லைலா ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தை பி.எஸ்.மித்திரன் இயக்க ராசி கண்ணா நாயகியாக நடிக்கிறார். .