Dhanush : நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறாராம். அவர் இயக்க உள்ள புதிய படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாம்.

இயக்குனராக ஜொலித்த தனுஷ்

தமிழ் திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பா.பாண்டி படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்று ஹிட் ஆனது.

இதையடுத்து நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சரத்குமார், அதிதி ராவ் ஆகியோரை வைத்து தனுஷ் இயக்கிய வரலாற்று படம் முதல் கட்ட படப்பிடிப்புக்கு பின் கிடப்பில் போடப்பட்டது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது.

அடுத்தது காமெடி படம்

தான் இயக்கிய 2-வது படம் முடங்கியதால், அப்செட் ஆன தனுஷ், பின்னர் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். தமிழில் இவர் கைவசம் மித்ரன் ஆர் ஜவகர் இயக்கும் திருச்சிற்றம்பலம், செல்வராகவனின் நானே வருவேன் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறாராம். அவர் இயக்க உள்ள புதிய படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட படமாக தயாராக உள்ளதாம். இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளாராம். மேலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் ரோபோ சங்கர், ராமர் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை நடிகர் ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... Beast movie : பீஸ்ட் படத்தை புரமோட் செய்ய பழைய பார்முலாவை கையிலெடுத்த விஜய்! Fans-க்கு செம டிரீட் வெயிட்டிங்