Beast movie : கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாத நிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விஜய் பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ளார்.
பீஸ்ட் படக்குழு
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கிய நெல்சன் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
5 மொழிகளில் ரிலீஸ்
பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழில் தயாராகி உள்ள இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்தியா படமாக வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி உள்ளது.

புரமோஷனுக்கு தயாராகும் விஜய்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தப்படாத நிலையில், தற்போது இப்படத்தின் புரமோஷனுக்காக நடிகர் விஜய் பழைய பார்முலாவை கையில் எடுத்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை நடிகர் விஜய், தான் நடிக்கும் படங்கள் வெளியாகும் சமயத்தில் தொலைக்காட்சி நேர்காணல்களில் கலந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான தலைவா படத்துக்கு பின்னர் அவர் எந்த தொலைக்காட்சி நேர்காணல்களிலும் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், தற்போது பீஸ்ட் படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஜய் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் மாதம் 10-ந் தேதி ஒளிபரப்பப்பட உள்ளதாம். மொத்தம் 4 எபிசோடுகளாக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப திட்டமிட்டு உள்ளனர். ரிலீசுக்கு முன்னர் 1 எபிசோடையும், பின்னர் 3 எபிசோடுகளையும் ஒளிபரப்ப உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... Alia Bhatt : படத்துல எங்க ஆளையே காணோம்னு தேடும் ரசிகர்கள்... RRR படக்குழு மீது கடும் அப்செட்டில் ஆலியா பட்
