Asianet News TamilAsianet News Tamil

sivakarthikeyan : மிஸ்டர் லோக்கல் படத்துக்கு ரூ.4 கோடி சம்பள பாக்கி- தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு

sivakarthikeyan : மிஸ்டர் லோக்கல் படத்திற்காக பேசப்பட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.11 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், ரூ.4 கோடியை தராமல் பாக்கி வைத்திருப்பதாகவும் சிவகார்த்திகேயன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Actor sivakarthikeyan files case against producer gnanavel raja
Author
Tamil Nadu, First Published Mar 29, 2022, 9:42 AM IST

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீசான படம் மிஸ்டர் லோக்கல். எம்.ராஜேஷ் இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 

மேலும் ராதிகா, சதீஷ், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கடும் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், இப்படத்திற்காக தனக்கு பேசப்பட்ட சம்பளத்தொகையை முழுமையாக தராமல் ரூ.4 கோடி பாக்கி வைத்த தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Actor sivakarthikeyan files case against producer gnanavel raja

மிஸ்டர் லோக்கல் படத்திற்காக பேசப்பட ரூ.15 கோடி சம்பளத்தில், ரூ.11 கோடி மட்டுமே கொடுத்ததாகவும், ரூ.4 கோடியை தராமல் பாக்கி வைத்திருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

பாக்கி தொகையை செலுத்தும் வரை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்து வரும் சிம்புவின் பத்து தல, விக்ரம் - பா.இரஞ்சித் படம் மற்றும் ஜிவி பிரகாஷின் ரிபெல் ஆகிய படங்களில் முதலீடு செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு வருகிற மார்ச் 31-ந் தேதி நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... Dhanush : காமெடி படம் இயக்க தயாராகும் தனுஷ் - யார் யாரெல்லாம் நடிக்க போறாங்க தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios