பொன்னியின் செல்வன் விழாவில் லியோ அப்டேட் சொல்லி அதிரவைத்த ‘குந்தவை’ திரிஷா... அப்படி என்ன சொன்னாங்க?
கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை திரிஷா, லியோ படத்தின் அப்டேட்டை வெளியிட்டார்.
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நேற்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக நடிகை திரிஷா, நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வனில் சமுத்திரக்குமாரி பூங்குழலியாக நடித்து மக்கள் மனதை கவர்ந்திருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களைக் காண மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிகழ்ச்சியில் பேச வந்த நடிகை திரிஷாவிற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து வரவேற்பளித்தனர். இதனைத்தொடர்ந்து பேசிய த்ரிஷா,கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது எனவும் கோவையில் தனக்கு மூன்று விஷயங்கள் பிடிக்கும், கோவை மக்கள் பேசுகின்ற தமிழ் பிடிக்கும், அழகாக இருக்கும் எனவும் உணவு பிடிக்கும் என்றும், கோவையில் அமைதி எப்போதும் இருக்கிறது. அது எப்படி இருக்கிறது என தெரியவில்லை.
இதையும் படியுங்கள்... காதல்துறை அமைச்சர்; உருட்டுதுறை அமைச்சர் யார்.. யார்? பொன்னியின் செல்வன் விழாவில் லிஸ்ட் போட்டு சொன்ன கார்த்தி
எப்போதும் கோவையில் பாசிட்டிவிட்டி இருக்கும் என தெரிவித்தார். திரிஷா பேசும் போது குறிக்கிட்ட ரசிகர்கள் லியோ திரைப்பட்டதின் அப்டேட் கேட்டு ஆரவாரம் செய்ததை அடுத்து அப்டேட் சொன்ன நடிகை த்ரிஷா, "லியோவோட சூட்டிங்ல இருந்துதான் வரேன், லோகேஷும் உங்களோட தளபதி ரொம்பவே நல்லா இருக்காங்க, மற்றதை லியோ ஈவன்ட்ல பேசலாம் என அவர் சொன்னதை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சயில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசும்போது, பூங்குழலி கெட்டப்பில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் நிறைய வந்துள்ளதை பார்த்ததாகவும் பூங்குழலி கதாப்பாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனைத்தான் பூங்குழலிக்கு பிடிக்கும் எனவும் நல்ல மனிதராக இருந்தால் போல் ஐஸ்வர்யா லட்சுமிக்கு பிடிக்கும் என தெரிவித்தார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் ஆதித்யா கரிகலான் மற்றும் நந்தினியின் கதையை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் அகநக பாட்டின் வீடியோவை தரமாட்டீங்கறீங்களே அதை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... vikram : எந்த கெட்டப் போட்டாலும் நச்சுனு சூட்டாகுதே எப்படி? - சீக்ரெட்டை வெளியிட்ட நடிகர் விக்ரம்