காதல்துறை அமைச்சர்; உருட்டுதுறை அமைச்சர் யார்.. யார்? பொன்னியின் செல்வன் விழாவில் லிஸ்ட் போட்டு சொன்ன கார்த்தி
கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி என்ன பேசினார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மணிரத்னம் இயக்கிய பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ரூ.500 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், வந்தியத்தேவனாக கார்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படம் ஏப்ரல் 28-ந் தேதி ரிலீசாக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னியின் செல்வன் 2 ஆந்தம் பாடல் வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று கோவையில் பொன்னியின் செல்வன் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... vikram : எந்த கெட்டப் போட்டாலும் நச்சுனு சூட்டாகுதே எப்படி? - சீக்ரெட்டை வெளியிட்ட நடிகர் விக்ரம்
இதில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது : நான் மன்னனாக இருந்தால், காதல் துறை அமைச்சர் பதவி பூங்குழலிக்கும் பேரழகுத்துறை அமைச்சர் பதவியை நந்தினிக்கும், என்னை விட நல்லவனான பொன்னியின் செல்வனுக்கு பெண்கள் நலத்துறையை கொடுப்பேன் என தெரிவித்தார். அதேபோல் சிங்கில்ஸ் நலத்துறை அமைச்சர் பதவியை தானே எடுத்து கொள்வதாகவும், உருட்டு துறை அமைச்சராக நம்பி ஜெயராமுக்கு கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் திரைப்படத்தில் எடுக்கபட்டு நீக்கப்பட்ட வசனங்களை ரசிகர்களிடம் கூறிய கார்த்திக், தனது மனைவி குறித்து பேசும் போது, ரொமான்ஸ் இல்லாத கதையே நடிக்கமாட்டீங்களா என தனது மனைவி கேட்டதாகவும், வந்தியதேவன் எல்லாரையும் பார்த்து ஜொல்லுவிடுகிறான் ஆனால் கண்ணியமானவாக இருக்கிறான் என தனது மனைவி கூறியதாகவும் சொன்னதை கேட்டு அங்கிருந்தவர் சிரித்தனர்.
இதையும் படியுங்கள்... நாயகன் 2-ம் பாகத்தில் நடிக்கனும்... மனதில் இருந்த ஆசையை பொன்னியின் செல்வன் மேடையில் கொட்டிய ஜெயம் ரவி