vikram : எந்த கெட்டப் போட்டாலும் நச்சுனு சூட்டாகுதே எப்படி? - சீக்ரெட்டை வெளியிட்ட நடிகர் விக்ரம்
கோவையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விக்ரம் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் விக்ரமின் யதார்த்தமான பேச்சு அங்கு வந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.
அதில் விக்ரம் பேசியதாவது : “உக்கடத்து பப்பபடமே சுத்திவிட்ட பம்பரமே, விக்ரம்கிட்ட அருள்வாக்கு கேட்காதீங்க என பாட்டுபாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தான் பல்வேறு திரைப்படங்களில் உடலை ஏற்றி, இறக்கி நடித்திருந்தாலும் மஜா திரைப்படத்திற்கு மட்டும் தனக்கு பிடித்த உணவை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்ததாகவும் மஜா திரைப்படத்திற்காக பொள்ளாச்சியில் நடந்த சூட்டிங்கில் தான் இட்லி 28 வெரைட்டி மற்றும் 50 வகை தோசை இருக்கிறது என தான் தெரிந்து கொண்டதாக நினைவு கூர்ந்தார்.
இதையும் படியுங்கள்... நாயகன் 2-ம் பாகத்தில் நடிக்கனும்... மனதில் இருந்த ஆசையை பொன்னியின் செல்வன் மேடையில் கொட்டிய ஜெயம் ரவி
தொடர்ந்து பேசிய விக்ரம் பார்வையாளர்களிடம், "எப்படிங்க அழகா பேசிறீங்க. நானும் ட்ரை பண்றேன் முடியல" என கொங்கு தமிழிலும், சென்னை தமிழிலும் பேசியதோடு, அந்நியன் திரைப்படத்தின் வசனத்தை கொங்கு தமிழில் பேசி அசத்தினார். மேலும் ஆதித்ய கரிகாலனை ஏற்று கொண்டதற்கு நன்றி தெரிவித்தோடு "ஆதித்யா வர்மா திரைப்படத்தில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். ஆதித்ய கரிகாலன் காதல் தோல்வியால் போருக்கு போறான்" என ஒப்பிட்டு போடப்பட்ட மீமை ரசித்ததாக கூறியதோடு, தான் ஒரு ஒரிஜினல் சூப் பாய் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே தங்கலான் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆராவரம் செய்த நிலையில், அங்கிருந்தான் வருகிறேன் எனவும் ரஞ்சித் சார் எல்லோரையும் கேட்டதாக சொல்ல சொன்னார் எனவும் தெரிவித்தார். முன்னதாக விக்ரம் மேடைக்கு வரும்போது எந்த கெட்டப் போட்டாலும் சூட்டாகிறது என தொகுப்பாளர் கேட்க, எல்லாம் மேக்கப் அப்புறம் பேரே விக்ரம்(விக்-ரம்)” என பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... Trisha : ‘குந்தவை’னு பெயர் மாத்துனது குத்தமா..! திரிஷாவில் ப்ளூ டிக்-ஐ பறித்த டுவிட்டர்