Trisha : ‘குந்தவை’னு பெயர் மாத்துனது குத்தமா..! திரிஷாவில் ப்ளூ டிக்-ஐ பறித்த டுவிட்டர்
டுவிட்டரில் குந்தவை என பெயரை மாற்றியதால், நடிகை திரிஷாவின் ப்ளூ டிக்கை டுவிட்டர் நிறுவனம் பறித்துள்ள சம்பவம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை திரிஷா தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் கைவசம் தற்போது பொன்னியின் செல்வன் 2, லியோ ஆகிய படங்கள் உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. மறுபக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளது. பொன்னியின் செல்வன் 2 பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளதால், இப்படத்தின் குழுவினருடன் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார் நடிகை திரிஷா.
இதையும் படியுங்கள்... Thangalaan : இதுதான்டா ஒரிஜினல் கே.ஜி.எஃப்...! மிரள வைக்கும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ இதோ
இதுதவிர சமூக வலைதளங்களிலும் படக்குழுவினர் வித்தியாசமாக புரமோஷன் செய்து வருகின்றனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரிலீஸ் ஆன சமயத்தில் நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை குந்தவை என மாற்றினார். அதேபோல் கார்த்தி வந்தியத்தேவன் எனவும், ஜெயம் ரவி அருண்மொழிவர்மன் எனவும், விக்ரம் ஆதித்த கரிகாலன் எனவும் பெயரை மாற்றி இருந்தனர்.
தற்போது பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அதனை புரமோட் செய்யும் விதமாக தற்போது நடிகை திரிஷா டுவிட்டரில் தனது பெயரை மாற்றி இருக்கிறார். அவர் பெயரை குந்தவை என மாற்றியதும் அவரது ப்ளூ டிக் பறிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷாக் ஆன நடிகை திரிஷா மீண்டும் தனது பெயரை ஏற்கனவே இருந்தபடியே Tris என மாற்றி இருக்கிறார். அப்படி இருந்தும் அவருக்கு ப்ளூ டிக் மீண்டும் வழங்கப்படவில்லை.
இதையும் படியுங்கள்... திரையுலகின் சீயானுக்கு இன்று பிறந்தநாள்... ‘கென்னி’ விக்ரம் பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ