நடிகர் விக்ரமின் பிறந்தநாளான இன்று அவர் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் இருந்து ஸ்பெஷல் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் தயாராகி வருகிறது. பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். கே.ஜி.எஃப்-ஐ மையமாக வைத்து வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக தங்கலான் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மிரள வைக்கும் சீயான் விக்ரமின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோ ❘ Thangalaan ❘ Vikram ❘ Pa Ranjith

தங்கலான் திரைப்படத்தை 3டி தொழில்நுட்பத்தில் படமாக்கி வருகின்றனர். இப்படத்தில் மலையாள நடிகை பார்வதி, மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன், நடிகர் பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார். இப்படம் ரிலீஸ் ஆனால் உலகளவில் பேசப்படும் என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இதையும் படியுங்கள்... திரையுலகின் சீயானுக்கு இன்று பிறந்தநாள்... ‘கென்னி’ விக்ரம் பற்றி பலரும் அறிந்திடாத 10 ஆச்சர்ய தகவல்கள் இதோ

தங்கலான் படத்தின் நாயகன் விக்ரம் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது. ஏராளமான ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நடிகர் விக்ரமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.

அதில் கொளுத்தும் வெயிலில் வேர்வை சிந்த நடிகர் விக்ரமும், படக்குழுவினரும் உழைத்துள்ளதை காட்சிப்படுத்தியுள்ளனர். கே.ஜி.எஃப்-பின் ரியல் முகத்தை இப்படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்க்கும் போது நடிகர் விக்ரமை ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு டோட்டலாக மாற்றி இருக்கிறார் இயக்குனர் பா.இரஞ்சித். 57 வயதில் இவ்வளவு ரிஸ்க் எடுத்து இப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோய் உள்ளனர்.

Thangalaan - Exclusive Making From the Sets | Chiyaan Vikram | Pa Ranjith | G V Prakash Kumar

இதையும் படியுங்கள்... டாக்டர் பட்டம் பெற்றார் பாடகர் மனோ - குவியும் வாழ்த்துக்கள்