54 வயதில் 20 கிலோ வெயிட் லாஸ்; ஊசி போட்டு ஒல்லி ஆனாரா குஷ்பு?
54 வயதாகும் நடிகை குஷ்பு 20 கிலோ உடல் இடையை குறைத்து ஸ்லிம்மானது எப்படி என்பது பற்றி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார்.

Actress Khushbu Fitness Secret : 90-களில் சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சமூக வலைதளங்களிலும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில், தனது உடல் எடையைக் குறைத்து வருவதாக குஷ்பு தெரிவித்திருந்தார். தற்போது 20 கிலோ எடையைக் குறைத்த குஷ்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது 54 வயதில் குஷ்பு சுந்தர் 20 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.
Actress khushbu
9 மாதங்களில் உடல் எடையை குறைத்த Khushbu
கொரோனா காலகட்டத்தில் தான் உடற்பயிற்சியைத் தொடங்கியதாக குஷ்பு தெரிவித்துள்ளார். அப்போது அவரது எடை 93 கிலோவாக இருந்தது. ஒன்பது மாதங்களில் தனது எடையைக் குறைத்ததாக 'டெல் மை ஸ்டோரி' என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குஷ்பு கூறினார். அதிக எடை காரணமாக பல சிரமங்களை சந்தித்ததாகவும், தற்போது மூட்டு வலி குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். குஷ்புவின் புகைப்படங்களுக்கு பாராட்டுக்களுடன் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நடிகை குஷ்புவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டதால் அதிர்ச்சி!
khushbu Weight Loss
ஊசி போட்டு ஒல்லி ஆனாரா Khushbu?
அதில் ஒரு விமர்சனக் கருத்துக்கு குஷ்பு அளித்த பதில் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மவுன்ஜாரோ ஊசியை குஷ்பு எடுத்துக் கொண்டதாக அந்த நபர் கருத்து தெரிவித்திருந்தார். 'இது மவுன்ஜாரோ ஊசியின் மாயாஜாலம். இதை உங்கள் பாலோவர்களும் தெரிந்து கொள்ளட்டும். அவர்களும் ஊசி போட்டுக் கொள்ளலாமே' என்று எக்ஸ் தளத்தில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார்.
khushbu Fitness
நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த Khushbu
இதைக் கண்ட குஷ்பு, உடனடியாக பதிலளித்தார். 'உங்களைப் போன்றவர்கள் எங்களுக்கு எப்போதும் தலைவலியாக இருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் முகத்தைக் காட்ட மாட்டீர்கள். ஏன் என்று உங்களுக்குத் தெரியும். உங்கள் மனம் எவ்வளவு அழுக்காக இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் பெற்றோருக்காக வருந்துகிறேன்' என்று குஷ்பு பதிலளித்தார். நடிகை குஷ்புவை போல் அவரது மகள்களும் தங்கள் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... குஷ்பு வெளியிட்ட வீடியோ! ரவி மோகனின் சமூக வலைதள பக்கத்தை பார்த்து ஏமார்ந்து போன ரசிகர்கள்!