சபரிமலையில் அட்ராசிட்டி செய்த அஜித், விஜய் ரசிகர்கள்... அதிரடி உத்தரவு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றம்
சபரிமலையில் துணிவு மற்றும் வாரிசு பட போஸ்டர்களுடன் போஸ் கொடுத்தபடி அஜித், விஜய் ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், அதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அஜித், விஜய்யின் படங்கள் நாளை ரிலீசாக உள்ளதால் திரும்பியபக்கமெல்லாம் துணிவு மற்றும் வாரிசு பற்றிய பேச்சுகள் தான் அடிபடுகிறது. இரு படங்களுக்குமே முன்பதிவு படு ஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் இரண்டு திரைப்படங்களுக்குமே சமமான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாள் முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதால், இருதரப்பு ரசிகர்களும் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைத்து ஆரவாரம் செய்து வருகின்றனர். இயக்குனர் எச்.வினோத் கூட சமீபத்திய பேட்டி ஒன்றில், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் செய்யும் புரமோஷன், நாம் ரூ.100 கோடி செலவு செய்தாலும் கிடைக்காது என்று கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... ஒற்றை வார்த்தைக்காக மனம் மாறிய சந்தானம்! AK 62 படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன தெரியுமா?
அவர் சொன்னது போல் தென் மாநிலங்களில் எங்கு போனாலும் வாரிசு, துணிவு போஸ்டர்கள் இல்லாத இடத்தை பார்க்க முடியாத சூழல் தான் தற்போது உள்ளது. குறிப்பாக தற்போது ஐயப்பன் கோவில் சீசன் என்பதால், சபரிமலைக்கு மாலை போட்டு ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். அங்கும் துணிவு மற்றும் வாரிசு பட போஸ்டர்களுடன் போஸ் கொடுத்தபடி அஜித், விஜய் ரசிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில், கேரள உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அது என்னவென்றால், சபரிமலை கோவில் வளாகத்திற்குள் சினிமா போஸ்டர்களை எடுத்து வருவதற்கும், இசைக்கருவிகளை இசைப்பதற்கும் தடை விதிக்குமாறு தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. அஜித், விஜய் ரசிகர்கள் செய்த அட்ராசிட்டி தான் இந்த உத்தரவுக்கு காரணம்.
இதையும் படியுங்கள்... மயோசிட்டிஸ் பிரச்சனையால் சமந்தாவிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்! படவிழாவிற்கு கையில் ஜெபமாலையுடன் வந்த புகைப்படங்க