'மாமன்னன்' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா? வெளியான தகவல்!
'மாமன்னன்' படத்தில் நடிப்பதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பல ஹீரோயின்கள் தொடர்ந்து அறிமுகமாகி வந்தாலும், சிலர், ஒரே படத்தில்.. தங்களின் சொந்த ஊருக்கு மூட்டையை கட்டி விடுகிறார்கள். இதே நிலை தான் சில வாரிசு நடிகைகளுக்கும்... ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களுக்கு எதிராக வாரி இறைக்கப்படும் விமர்சனங்களை கடந்து, விடாப்பிடியாக திரையுலக வாழ்க்கையில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள்.
Keerthy Suresh
ஆரம்பத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழில் அறிமுகமான போது, பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானவர் தான். முதல் படத்தில் தோல்வியை சந்தித்தாலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த ரஜினி முருகன் மற்றும் ரெமோ ஆகிய படங்கள் அடுத்தது ஹிட் அடித்தது. குறிப்பாக கீர்த்தி சுரேஷ், சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட 'மகாநடி' படத்தில்... சாவித்திரியாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.
தண்ணீருக்கு நடுவே.. மகன் தேவுக்கு பர்த்டே கொண்டாடிய சூர்யா - ஜோதிகா! வைரலாகும் போட்டோஸ்..!
'மகாநடி' படத்திற்கு பின்னர் தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்,நடிப்பதிலும், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கில் இவர் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்த சர்க்காரு வாரி பட்டா, நானிக்கு ஜோடியாக நடித்த, தசரா ஆகிய படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.
ஆனால் தமிழில், ஹீரோயின் சப்ஜெட் படங்களை மையமாக வைத்து நடித்த படங்கள் மற்றும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியான வெற்றி பெறாத நிலையில், கடந்த வாரம், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி நடித்திருந்த 'மாமன்னன்' திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!
இப்படத்தின் வெற்றியை தற்போது வரை படக்குழு கொண்டாடி வரும் நிலையில்... இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தான் வெளியாகியுள்ளது. அதாவது 'மாமன்னன்' படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ரூ.2 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.