தண்ணீருக்கு நடுவே.. மகன் தேவுக்கு பர்த்டே கொண்டாடிய சூர்யா - ஜோதிகா! வைரலாகும் போட்டோஸ்..!
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்களுடைய பிள்ளைகளுடன் வெளிநாட்டுக்கு வெக்கேஷன் சென்றுள்ள நிலையில், அங்கு தங்களின் மகன் தேவ் பிறந்தநாளை கொண்டாடிய போட்டோஸ் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில், பல பிரபலங்கள் பொறாமை படும் அளவிற்கு, நட்சத்திர ஜோடிகளாக வாழ்ந்து வரும் சூர்யா - ஜோதிகா இருவரும் தற்போது தங்களின் பிள்ளைகளுடன் வெகேஷனுக்காக வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.
சூர்யா - ஜோதிகா இருவருமே, திரைப்பட நடிப்பு, தயாரிப்பு, சமூக சேவை போன்ற விஷயங்களில் பிசியாக இருந்தாலும், தங்களுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிடவும், வருடத்திற்கு இரண்டு முறையாவது வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
டென்மார்க்கில் குடும்பத்தினருடன் நடிகர் சூர்யா - வைரலாகும் கலக்கல் வீடியோ
குடும்பத்துடன் இவர்கள் வெகேஷனுக்கு செல்லும் போது எடுத்து கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது. அந்த வகையில் தற்போது, சூர்யா - ஜோதிகா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் வெகேஷன் சென்றுள்ளது மட்டும் இன்றி, மகன் தேவ் பிறந்தநாளையும் அங்கு தண்ணீருக்கு நடுவே கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கடந்த மாதம் 7 ஆம் தேதி, தேவ் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நிலையில், தேவ் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாட தான்... சூர்யா ஜோதிகா அங்கு சென்றனர் என கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேரு இடங்களுக்கு சென்ற மகிழ்ச்சியான தருணங்களின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
திமுகவிலும் இன்றுவரை சாதி பாகுபாடு பெரும் சவாலாக இருந்து வருகிறது; பா. ரஞ்சித் டுவீட்!!
சூர்யா - ஜோதிகா இருவருமே, சென்னையில் இருந்து மும்பையில் குடியேறி விட்டதால், தங்களின் பிள்ளைகளையும் அங்குள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தான் படிக்க வைத்து வருகிறார்கள்.
பாலிவுட் திரையுலகை சேர்ந்த, பல பிரபலங்களின் பிள்ளைகளும் இந்த பள்ளியில் தான் தங்களின்... ஸ்கூல் ஸ்டடிசை முடித்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மகள், ஷாருக்கானின் மகன், காஜலின் மகள் போன்ற பலர் இங்கு தான் படித்து வருகிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மகன்களுடன் மொட்டை போட்டு... மனம் உருகி பிரார்த்தனை செய்த தனுஷ்!
இதை தொடர்ந்து, சூரியாவும் ஜோதிகாவும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஜோதிகா பல வருடங்களுக்கு பின்னர், ஒரு ஹிந்தி படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.
அதே போல், சூர்யா தற்போது அடுத்தடுத்த தமிழ் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும்... ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.