செம்ம கியூட்..!முதல் முறையாக குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சரவணன் மீனாட்சி ரியல் ஜோடி... செந்தில் - ஸ்ரீஜா!
செந்தில் - ஸ்ரீஜா தம்பதி முதல் முறையாக தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள்... தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் ஒன்றாக இணைந்து நடித்த போது, காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் செந்தில் - ஸ்ரீஜா ஜோடி. இவர்கள் இருவரும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் ஒன்றாக இணைந்து நடித்து வந்த நிலையில், இருவரின் கெமிஸ்ட்ரியும் தாறுமாறாக இருந்த நிலையில் ரசிகர்கள் பலர்.. இந்த ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறினால் மிகவும் நன்றாக இருக்கும் என தெரிவித்து வந்தநிலையில், பின்னர் உண்மையிலேயே இருவரும் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தனர்.
செந்தில் - ஸ்ரீஜா தம்பதிக்கு திருமணம் ஆகி கிட்ட தட்ட 9 வருடங்கள் ஆகும் நிலையில், ஓரிரு நாட்களுக்கு முன்னர், இருவரும் தங்களின் 9-ஆவது ஆண்டு திருமண நாளை எளிமையான முறையில் வீட்டிலேயே கொண்டாடி உள்ளனர். அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
மாமன்னன் படத்தில் வடிவேலுக்கு இத்தனை கோடி சம்பளமா? கிள்ளி கொடுக்காமல்... அள்ளி கொடுத்த தயாரிப்பாளர்!
அதாவது இந்த புகைப்படத்தின் மூலம், சுமார் 8 வருடங்கள் கழித்து தங்களுக்கு பிறந்த மகனின் முகத்தை முதல் முறையாக ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர் செந்தில் - ஸ்ரீஜா ஜோடி. பார்ப்பதற்கு ஸ்ரீஜா மாதிரியே குழந்தை உள்ளதாக, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படமும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
செந்தில் - ஸ்ரீஜா ஜோடி திருமணத்திற்கு பின்னரும் 'மாப்பிள்ளை' என்கிற சீரியலில் சேர்ந்து நடித்தனர். அதே போல்... செந்தில் சமீபத்தில் சீரியலில் இணைந்து நடிப்பவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என காமெடியாக பேசிய விஷயம் வைரலானது. அதே பேட்டியில் சீரியலில் இருக்கும் கதாபாத்திரம் போல், நிஜத்தில் அவர்கள் இருப்பதில்லை. சரவணன் மீனாட்சி தொடரில் கூட, மீனாட்சியை கதாபாத்திரத்தை பார்த்தே காதலித்தேன் நிஜத்தில் ஸ்ரீஜா மிகவும் புத்திசாலிதளமான பெண். நான் எது செய்தாலும் கண்டுபிடித்து விடுவார் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.