'சீதா ராமன்' சீரியலில் இனி பிரியங்கா நல்காரிக்கு பதில்.. வெள்ளித்திரை ஹீரோயின்? யார்... வெளியான சூப்பர் அப்டேட
பிரியங்கா நல்காரி, ஹீரோயினாக நடித்து வரும் 'சீதா ராமன்' தொடரில் இருந்து, இவர் விலகி விட்டதாக கூறப்படும் நிலையில், இனி இவருக்கு பதில், பிரபல வெள்ளித்திரை நாயகி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Priyanka Nalkari
சன் டிவி தொலைக்காட்சியில், சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'ரோஜா' சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர் பிரியங்கா நல்காரி. இந்த தொடர் சுமார் 4 வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து பிரியங்கா நல்காரி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆரம்பமான... 'சீதா ராமன்' என்கிற தொடரில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். ஒரு பெண்ணின் உண்மையான அழகு அவளின் மனசு தான் என்றும், முகம் இல்லை என்கிற கருத்தை மையமாக வைத்தே இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் துவங்கிய சில நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது.
'சீதா ராமன்' தொடரில் நடிக்க துவங்கிய சில மாதங்களில் பிரியங்கா தன்னுடைய நீண்ட நாள் காதலரை வெளிநாட்டில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என கூறி இருந்தார். ஆனால் திடீர் என குடும்ப சூழல், மற்றும் கணவரின் விருப்பப்படி சீரியலில் இருந்து விலகுவதை அறிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும், தன்னுடைய குடும்பத்திற்காக இவர் சீரியலை விட்டு விலகுவதால்... தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். எனினும் சீதா ராமன் தொடரில், சீதா கதாபாத்திரத்தில் அடுத்து யார் நடிப்பார் என? ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வெள்ளித்திரை ஹீரோயின் ஒருவர் தான் சீதா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
புதிய சீதாவாக மிக மிக அவசரம் பட நடிகை ஸ்ரீ பிரியங்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவில் ஆசாமி படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரூ, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீ ப்ரியங்கா தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
புதிய சீதாவாக மிக மிக அவசரம் பட நடிகை ஸ்ரீ பிரியங்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவில் ஆசாமி படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் 13ஆம் பக்கம் பார்க்க, கங்காரூ, ஸ்கெட்ச், மிக மிக அவசரம், கொம்பு வச்ச சிங்கம்டா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஸ்ரீ ப்ரியங்கா தான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.