வசூல் மழை பொழியும் தசரா... பி.எம்.டபிள்யூ கார் பரிசளித்து வெற்றியை வேறலெவலில் கொண்டாடிய படக்குழு
நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம், வசூல் மழை பொழிந்து வரும் நிலையில் அப்படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி உள்ளது.
நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் தசரா. இப்படத்தை ஒடேலா ஸ்ரீகாந்த் என்கிற புதுமுக இயக்குனர் தான் இப்படத்தை இயக்கி இருந்தார். இவர் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த மாதம் மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆன தசரா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆன தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் தசரா படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் ரிலீசான ஒரே வாரத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதையும் படியுங்கள்... Watch : ‘வேணாம்பா, லக்கேஜ் நானே எடுத்துட்டு வாரேன்’ உதவியாளரிடம் பெருந்தன்மையை காட்டிய அஜித்... என்ன மனுஷன்யா!
இந்நிலையில் தசரா படத்தின் வெற்றியை படக்குழுவினர் தடபுடலாக கொண்டாடி உள்ளனர். இப்படத்தில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் நானி ஆகியோர் ஜோடியாக மாலை அணிந்தபடி போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களில் இருவரும் மகிழ்ச்சியாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
அதேபோல் இப்படத்தின் இயக்குனர் ஒடேலா ஸ்ரீகாந்திற்கு விலையுயர்ந்த பி.எம்.டபிள்யூ காரையும் பரிசாக வழங்கி உள்ளனர். தசரா படத்தின் தயாரிப்பாளர் தான் இயக்குனருக்கு இந்த காரை பரிசாக வழங்கி உள்ளார். இந்த நிகழ்வின்போது நடிகர் நானியும் உடன் இருந்தார். இதுகுறித்த புகைப்படமும் வெளியாகி உள்ளதை பார்த்த ரசிகர்கள் இயக்குனருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... August 16 1947 Review: கௌதம் கார்த்திக் நடித்த 'ஆகஸ்ட் 16, 1947' திரைப்பட எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!