'கயல்' சீரியல் நடிகை அபி நவ்யாவுக்கு நடந்த வளைகாப்பு..! நிறைமாத நிலவாக மஞ்சள் சேலையில் ஜொலிக்கும் போட்டோஸ்!
பிரபல சீரியல் நடிகை அபி நவ்யா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இவருக்கு, மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நடந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை அபி நவ்யா வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தொலைக்காட்சிகளில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பானாலும், ஒரு சில சீரியல்கள் ரசிகர்கள் மனதில் நீக்காத இடம் பிடித்து விடுகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'கயல்' சீரியலில்... ஆனந்தி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அபி நவ்யா.
இவருக்கும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘என்றென்றும் புன்னகை’ சீரியல் தொடரின் நாயகன் தீபக்கிற்கும் கடந்த ஜனவரி மாதம், மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்தது.
மேலும் செய்திகள்: Yogi Babu Meet Vijayakanth Video:கேப்டன் விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு..! வைரலாகும் வீடியோ..!
திருமணத்திற்கு பின்பும், தொடர்ந்து அபி நவ்யா சீரியல் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் திருமணமான ஒரு மாதத்தில் அபி நவ்யா கர்ப்பமான நிலையில், சமீபத்தில் தான் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு கர்ப்பமாக இருக்கும் போது எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் அபி நவினவியாவிற்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. மஞ்சள் நிற சேலையில்... கை நிறைய வளையலுடன் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களையும் இவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Tamannaah: கையில் ஹாண்ட் பேக்குடன்... ரெட் ரோஸ் போல் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டி மயக்கும் தமன்னா..!
அபி நவ்யா சீரியல் நடிகையாக ஆவதற்கு முன்பு, சில தனியார் தொலைக்காட்சி சேனல்களிகள் செய்தி வாசிப்பாளராக இருந்துள்ளார். அதே போல் இவருடைய கணவர் தீபக் டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமாகி பின்னர், சீரியல் நடிகராக மாறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!