- Home
- Cinema
- Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!
Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!
“சர்தார்“ படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கார்த்தி தரப்பிலிருந்து டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

'விருமன்', 'பொன்னியின் செல்வன்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் கார்த்தி நடிப்பில், தீபாவளியை முன்னிட்டு, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் P S மித்ரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சர்தார்”. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
உளவாளி கதை, மக்களுக்கான அரசியல், கமர்ஷியல் மசாலா, காமெடி என சரியான விகிதத்தில் அனைத்தும் அமைந்ததில் ரசிகர்களிடம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தற்போது வரை இந்த படம் தொடர்ந்து திரையரங்குகளில் வசூல் சாதனை செய்து வருகிறார்.
மேலும் செய்திகள்: Meera Mithun: மீராமிதுன் படத்தை ஓட்ட இப்படி ஒரு பிளானா? அதிரடி முடிவெடுத்த படக்குழு..!
இரண்டு வாரங்களை கடந்த பிறகும், ரசிகர்களிடம் இந்த படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பெற்று வருவதால், தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இயக்குநர் P S மித்ரனுக்கு தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்ஷ்மன்குமார் சுமார் 78 லட்சம் மதிப்புள்ள டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த பரிசினை நடிகர் கார்த்தி இயக்குநருக்கு வழங்கினார். விருமன், பொன்னியின் செல்வன் படங்களை தொடர்ந்து தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ இந்த வருடத்தில் கார்த்தியின் வெற்றி வரிசையில் ஹாட்ரிக் வெற்றியாக இடம் பிடித்த படம் என்பது குறிப்பிடதக்கது. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: சினிமாவுக்காக பெயரை மாற்ற சொன்ன பிரபலம்... ‘வாய்ப்பில்ல ராஜா’னு சொல்லி கெத்து காட்டிய அஞ்சலி நாயர்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.