Yogi Babu Meet Vijayakanth Video:கேப்டன் விஜயகாந்தை சந்தித்த யோகி பாபு..! வைரலாகும் வீடியோ..!
கேப்டன் விஜயகாந்தை, நடிகர் யோகி பாபு மரியாதை நிமித்தமாக சந்தித்து... வாழ்த்து பெற்றுள்ளார். இது குறித்த வீடியோவை அவரே வெளியிட, அது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் படு பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். எவ்வளவு பிஸியாக இருந்தாலும்... தன்னுடைய மனைவி, குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க அவர் மறந்து இல்லை. சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தைக்கு தந்தையான யோகி பாபு, சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். இந்நிலையில் திடீர் என நடிகர் விஜயகாந்த் அவர்களை சந்தித்த போது எடுத்த வீடியோ ஒன்றை யோகி பாபு வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: Sardar Movie: சர்தார் பட வெற்றி..! இயக்குநர் P S மித்ரனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் கார்த்தி..!
இந்த வீடியோவில், விஜயகாந்த் முன்பு மிகவும் பவ்வியமாக யோகிபாபு நிற்கின்றார். இதை பார்த்தாலே அவருக்கு எந்த அளவு மரியாதை கொடுக்கிறார் என்பதை பார்க்க முடிகிறது. மேலும் பின்னணியில்... விஜயகாந்த நடித்த 'சின்னக்கவுண்டர்' படத்தில் வரும் வானத்தை போல மனம் படைத்த மன்னவனே என்கிற பாடல் ஒலிக்கிறது. தற்போது உடல்நல பிரச்சனை காரணமாக... வீட்டில் முழு ஓய்வில் இருந்து வரும் விஜயகாந்த் மீண்டும் பழைய கேப்டனாக உடல்நலம் தேறி வெளியே வர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகள்: அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல... விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்
விசேஷ நாட்களிலும், பிறந்தநாள் போன்ற நன்னாளில் மட்டுமே ரசிகர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வரும், விஜயகாந்தை... யோகி பாபு தற்போது சந்தித்துள்ள வீடியோவை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருவதோடு, வைரலாக்கி வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Meera Mithun: மீராமிதுன் படத்தை ஓட்ட இப்படி ஒரு பிளானா? அதிரடி முடிவெடுத்த படக்குழு..!
- actor yogi babu
- captain vijayakanth
- karthi meets vijayakanth
- pei mama yogi babu
- premalatha vijayakanth
- rajinikanth meets vijayakanth
- vijayakanth
- vijayakanth birthday
- vijayakanth latest news
- yogi babu
- yogi babu comedy
- yogi babu comedy scenes
- yogi babu interview
- yogi babu latest
- yogi babu latest comedy
- yogi babu latest speech
- yogi babu movies
- yogi babu new movie
- yogi babu oviya new movie
- yogi babu speech
- yogi babu tum hi ho
- yogi babu videos