அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போல... விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி-யின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்
இமயமலைக்கு சென்றுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கு உள்ள ராயல் என்பீல்டு பைக் முன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். நடிகர் விஜய்யின் தந்தையான இவர், சமீபகாலமாக தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் பேசாமல் இருந்து வருகிறார். இருப்பினும் இருவரும் விரைவில் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.
எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் தனது சினிமா பயணம் குறித்தும், தனது வாழ்வில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்தும் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி யூடியூப் சேனல் தொடங்கிய பின்னர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார் எஸ்.ஏ.சி.
இதையும் படியுங்கள்... ஈஃபில் டவர் முன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்
இந்நிலையில், டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்றிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதன்படி இமயமலைக்கு சென்றுள்ள அவர் அங்கு உள்ள ராயல் என்பீல்டு பைக் முன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பார்த்து அனைவரும் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.
சமீபத்தில் நடிகர் அஜித், இமயமலையில் பைக் ட்ரிப் மேற்கொண்டு இருந்தார். அவரின் பைக் ட்ரிப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. தற்போது எஸ்.ஏ.சியும் அங்கிருந்து புகைப்படம் வெளியிட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள், அஜித்துக்கே டஃப் கொடுப்பார் போலயே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... நான் ஸ்டாப்பாக வசூலை வாரிக்குவிக்கும் காந்தாரா... ரூ.300 கோடி கிளப்பில் இணைந்து சாதனை