MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu Movie Day 5 Box Office : கருப்பு 5ம் நாள் வசூல் எவ்வளவு? டபுள் செஞ்சுரி அடிக்கப்போகும் சூர்யா படம்

Karuppu Movie Day 5 Box Office : கருப்பு 5ம் நாள் வசூல் எவ்வளவு? டபுள் செஞ்சுரி அடிக்கப்போகும் சூர்யா படம்

Karuppu Box Office Collection : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் திரைக்கு வந்துள்ள கருப்பு திரைப்படத்தின் ஐந்தாம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 20 2026, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karuppu Movie Day 5 Box Office
Image Credit : X

Karuppu Movie Day 5 Box Office

சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆஃபிஸிலும் வேகமாக முன்னேறி வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள இந்தப் படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பெரிய ஹீரோவை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த ஆர்.ஜே.பாலாஜி, முதலில் விஜய்யிடம் கதையை கூறியதாக தகவல்கள் வெளியானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
சிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன கருப்பு
Image Credit : Instagram

சிக்கலை தாண்டி ரிலீஸ் ஆன கருப்பு

பின்னர் சில மாற்றங்களுடன் அந்தக் கதை சூர்யாவிடம் சென்றதாகவும், அவர் உடனே ஒப்புதல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகே படத்துக்கு ‘கருப்பு’ என பெயர் வைக்கப்பட்டது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா – திரிஷா ஜோடி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதலில் மே 14ஆம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம், தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட சிக்கல்களால் ஒரு நாள் தாமதமாக மே 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீடு தள்ளிப்போன நேரத்தில் ஆர்.ஜே.பாலாஜி உணர்ச்சிவசப்பட்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Related Articles

Related image1
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Related image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
34
கம்பேக் கொடுத்த சூர்யா
Image Credit : Asianet News

கம்பேக் கொடுத்த சூர்யா

ஆனால் படம் வெளியான பிறகு நிலைமை முழுவதும் மாறியது. முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கருப்பு’, சூர்யாவுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைத்த தரமான கம்பேக் படமாக பேசப்படுகிறது. தெய்வ வழிபாட்டை மையமாகக் கொண்டு மாஸ் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் கதையை ஆர்.ஜே.பாலாஜி சுவாரஸ்யமாக வடிவமைத்துள்ளதாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த வெற்றியைத் தொடர்ந்து சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி மீண்டும் இணைந்து இன்னொரு படம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

44
கருப்பு வசூல்
Image Credit : Asianet News

கருப்பு வசூல்

இதற்கிடையில், ‘கருப்பு’ திரைப்படத்தின் வசூல் விவரங்களும் கவனம் ஈர்த்துள்ளன. பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk தளத்தின் தகவல்படி, படம் வெளியான ஐந்தாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 12.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மொத்தமாக ஐந்து நாட்களில் இந்திய அளவில் 110 கோடி ரூபாயையும், உலகளவில் 161 கோடி ரூபாயையும் கடந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய வரவேற்பைப் பார்க்கையில், மிக விரைவில் 200 கோடி ரூபாய் கிளப்பில் இப்படம் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் நடந்தால் நடிகர் சூர்யாவின் முதல் 200 கோடி வசூல் திரைப்படம் என்கிற சாதனையை கருப்பு படைக்கும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
சூர்யா 45

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : தர்ஷனை பழிவாங்கிய பார்கவி... அன்புக்கரசி கழுத்தில் தாலி ஏறுமா?
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணிக்கு சாபம் விட்ட விஜயா... காசுக்காக வீட்டோட மாப்பிள்ளையாகப்போகும் ரவி?
Recommended image3
Venkat Prabhu : கோட் நம்பர் பிளேட்... முதல்வர் விஜய்-க்கு வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்
Related Stories
Recommended image1
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Recommended image2
Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved