MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?

Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?

Karuppu Movie OTT Release : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 19 2026, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karuppu OTT release
Image Credit : X

Karuppu OTT release

சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆரம்பத்தில் சில தொழில்நுட்ப மற்றும் நிதி சிக்கல்களால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டாலும், தற்போது படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கிய இந்த ஃபாண்டஸி ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தில் சூர்யாவுடன் திரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
கருப்பு ஓடிடி ரிலீஸ்
Image Credit : X

கருப்பு ஓடிடி ரிலீஸ்

சமூக நீதி, சட்ட அமைப்பின் குறைகள் மற்றும் கருப்பசாமி வழிபாட்டை மையமாகக் கொண்ட கருப்பு படத்தின் கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை உலகப் புகழ்பெற்ற ஓடிடி தளமான அமேசான் பிரைம் கைப்பற்றி உள்ளது. பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கு பின்பற்றப்படும் இடைவெளி நடைமுறையின் அடிப்படையில், ‘கருப்பு’ படம் ஜூன் மாத இரண்டாவது வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அல்லது அமேசான் பிரைம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

34
கருப்பு வசூல் வேட்டை
Image Credit : X

கருப்பு வசூல் வேட்டை

மே 14ஆம் தேதி அதிகாலை சிறப்பு காட்சிகளுடன் படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நிதி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தயாரிப்பு நிலுவைத் தொகைகள் காரணமாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு நேரடியாக தலையிட்டு பிரச்சினைகளை சரிசெய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மே 15ந் தேதி உலகம் முழுவதும் படம் வெளியிடப்பட்டு, முதல் வார இறுதிக்குள் சுமார் ரூ.147 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

44
அன்கட் வெர்ஷன்
Image Credit : instagram

அன்கட் வெர்ஷன்

‘கருப்பு’ திரைப்படத்தில் நட்டி நடராஜ், ஸ்வாசிகா, சிவதா மற்றும் இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாய் அப்யங்க்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் யோகிபாபு, இன்ஸ்டா பிரபலங்களான சதீஷ், தீபா, வாட்டர்மிலன் ஸ்டார் திவாகர் உள்பட பலர் நடித்திருந்தாலும், அவர்களின் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. அதனால் அவர்கள் நடித்த காட்சிகளை ஓடிடியில் சேர்த்து வெளியிடுமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
56 வயதிலும் யங் ஹீரோயின் போல் ஜொலிக்கும் குஷ்புவின் அழகு ரகசியம்! தினமும் முகத்துக்கு என்ன போடுறாங்க?
Recommended image2
Now Playing
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
Recommended image3
Now Playing
இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
Related Stories
Recommended image1
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Recommended image2
Karuppu Box Office Collection : சூர்யாவை பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக மாற்றிய கருப்பு... 4ம் நாள் வசூல் இத்தனை கோடியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved