MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?

Karuppu : இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு கருப்பு பட காட்சிக்கு கத்திரி போட்ட படக்குழு - பின்னணி என்ன?

Karuppu Team Apology to Ilaiyaraaja : இசைஞானி இளையராஜாவின் பெயரை பயன்படுத்தி கருப்பு படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றை தற்போது படத்தில் இருந்து நீக்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 19 2026, 01:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Karuppu Team Apology to Ilaiyaraaja
Image Credit : X

Karuppu Team Apology to Ilaiyaraaja

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, யோகி பாபு, மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தடைகளை தாண்டி ரிலீஸ் ஆன கருப்பு
Image Credit : Instagram

தடைகளை தாண்டி ரிலீஸ் ஆன கருப்பு

ரிலீஸுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கருப்பு’, பல சிக்கல்களை சந்தித்த பிறகே திரையரங்குகளை அடைந்தது. ஆரம்பத்தில் மே 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் காரணங்களால் படம் தள்ளிப்போனது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அந்த சமயத்தில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

Related Articles

Related image1
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Related image2
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
35
பிக் அப் ஆன கருப்பு
Image Credit : Asianet News

பிக் அப் ஆன கருப்பு

பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு, மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே ‘கருப்பு’ திரைப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்தன. குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யா முழுமையான மாஸ் ஹீரோவாக திரும்பியிருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பள்ளி விடுமுறை காரணமாக ஃபேமிலி ஆடியன்ஸின் வருகையும் தியேட்டர்களில் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

45
கருப்பு கதை என்ன?
Image Credit : Asianet News

கருப்பு கதை என்ன?

படத்தின் கதையும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக கருப்பசாமி அவதாரத்தில் சூர்யா களமிறங்குகிறார். அவருக்கும் வக்கீல் பேபி கண்ணனாக வரும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் இடையே நடைபெறும் மோதலே கதையின் மையக்கரு. குறிப்பாக கிளைமாக்ஸில் இடம்பெறும் “பதினெட்டாம் படி கருப்பு” காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

55
இளையராஜா சர்ச்சை
Image Credit : Dream Warrior Pictures

இளையராஜா சர்ச்சை

இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இடைவேளைக்கு முன் வரும் காட்சியில் ‘அலை ஓசை’ திரைப்படத்தின் “போராடடா” பாடல் ஒலிக்க, அதனைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவை குறிக்கும் வசனம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து படக்குழு விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இசைஞானி இளையராஜா அவர்களை எந்த வகையிலும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கில்லை. கதையின் ஓட்டத்திற்காக மட்டுமே அந்த காட்சி இடம்பெற்றது. அதனால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால், அதற்காக எங்களின் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
இளையராஜா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ganja Karuppu : விபத்தில் உயிரிழந்த தம்பி... விஜய் அரசுக்கு கண்ணீருடன் கஞ்சா கருப்பு வைத்த கோரிக்கை
Recommended image2
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Recommended image3
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Related Stories
Recommended image1
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Recommended image2
Karuppu OTT release : டெலிடட் சீன்களுடன் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் கருப்பு? எப்போ தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved