- Home
- Cinema
- கையில் தாலியை எடுத்த கார்த்திக்; வில்லன் சோலி முடிஞ்சிது - கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய அப்டேட்!
கையில் தாலியை எடுத்த கார்த்திக்; வில்லன் சோலி முடிஞ்சிது - கார்த்திகை தீபம் சீரியல் இன்றைய அப்டேட்!
கார்த்தி தன்னுடைய புதிய திட்டத்தை எக்சிகியூட் செய்து, தன் மீதான பழியை போக்கி மீண்டும் சாமுடீஸ்வரி வீட்டுக்குள் நுழைந்துள்ளான். இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.

கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், தொடர்ந்து TRP-யில் கெத்து காட்டி வருகிறது 'கார்த்திகை தீபம்' சீரியல். வாரம் தோறும் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், கார்த்தியை வெளியே அனுப்ப வேண்டும் என சிலர் திட்டம் போட்டு பஞ்சாயத்தை கூட்டி, ஊரை விட்டே வெளியேற்றிய நிலையில், இன்று என்ன நடக்க போகிறது. கார்த்தி தன் மீது எப்படி தவறு இல்லை என்பதை நிரூபிக்கிறார் என்பதை பார்ப்போம்.
பழியை போக்க கார்த்தி போட்ட புதிய பிளான்:
தன்னுடைய மாமா ராஜ ராஜனிடம், என் மீது விழுந்த பழியை போக்க மற்றொரு வழி இருப்பதாக கார்த்தி கூறிய நிலையில், இன்றைய எபிசோடில் மீண்டும் கார்த்தி பஞ்சாயத்தை கூட்டுகிறார். கார்த்தி ஏன் இந்த பஞ்சாயத்தை கூட்டுகிறான், என்ன ஆதாரம் அவனுக்கு கிடைச்சிருக்கு போகுது என சிவனாண்டி முதல் கார்த்தி மீது குற்றம்சாட்டிய பெண் முதல் அனைவரும் பஞ்சாயத்தில் கூடுகிறார்கள்.
நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!
உண்மையை சொன்ன பெண்:
கையில் தாலியோடு பஞ்சாயத்துக்கு வந்த கார்த்தி, நான் தானே தவறு செய்தேன் என அந்த பெண் கூறுகிறார். அவரை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்ல, பொய் சொன்ன பெண்ணுக்கு தூக்கி வாரி போடுகிறது. பஞ்சாயத்து ஆட்களும் இது தான் சரியாகி இருக்கும் என கருத்து சொல்ல, கார்த்தியும் தாலியை எடுத்து கொண்ட கட்டுவதற்கு போகிறார்.
சிவனாண்டியை கைது செய்யும் போலீஸ்:
பின்னர் அந்த பெண் கார்த்தி தாலி கட்டி விடுவானோ என்கிற பயத்தில், சிவனாண்டி சொல்லி தான் இப்படி செய்ததாக அனைவர் முன்பும் உண்மையை உடைக்கிறார். இதன் மூலம் கார்த்தி மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியாகிறது. இதை தொடர்ந்து, போலீசார் சிவனாண்டியை கைது செய்கிறார்கள். சிவனாண்டி மிகவும் திமிராக ஏய் என்கிட்டயே மோதுரியா... பாரு இந்த சிவனாண்டி 2 நாள்ல வெளியில வந்துடுவான் என வீர வசனம் பேச, போலீசார் அதெல்லாம் முடியாது எஃப்ஐஆர் போட்டாச்சு என கூறி பல்பு கொடுக்கிறார்கள்.
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?
ராஜ ராஜனுக்கு தெரியவரும் மாயா பற்றிய உண்மை:
கார்த்தி மீது தவறு இல்லை என்பதை அறிந்து சாமுண்டீஸ்வரியும் கார்த்தியை மன்னித்து வீட்டுக்குள் சேர்ந்து கொள்கிறார். ராஜ ராஜன் இதே சந்தோஷத்தில் கோவிலுக்கு போய் கார்த்தி பெயரில் அர்ச்சனை செய்கிறார். கார்த்தி குற்றமற்றவன் என்கிற தகவல் அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் சந்திரகலா கோவம் கொள்கிறாள்.
ராஜ ராஜன் கார்த்தியை சந்தித்து பிரசாதம் கொடுத்த நிலையில், கார்த்திக் மாயா மற்றும் மகேஷ் இடையே இடையே இருக்கும் உறவு குறித்தும், அவர்கள் செய்ததையும் சொல்கிறான் இதனால் ராஜ ராஜன் உச்ச கட்ட அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்த நிலையில்... நாளை என்ன நடக்க போகிறது என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.